2 நாளாக நடக்கும் பெரிய தவறு.. இதுக்கு எல்லாம் அபராதம் விதிக்கக் கூடாது.. இந்த பசங்க எல்லாம் ரொம்ப பணக்காரங்க.. முன்னாள் இங்கிலாந்து வீரர் தாக்கு

0
323

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது பந்து அடிக்கடி மாற்றப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் அதைத்தவிர ஒரு பெரிய தவறு நடைபெற்ற வருவதாக முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து பேசிய அவர், லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் வெறும் 83 ஓவர்கள் தான் வீசப்பட்டது. இரண்டாவது நாளில் மொத்தமாகவே இது அனைவரும் சேர்ந்து 75 ஓவர்கள் தான் வீசி இருக்கிறார்கள்.

- Advertisement -

22 ஓவர்கள் வீசப்படவில்லை:

இதை 90 ஓவர்களுக்கு மிகவும் குறைவாகும். இரண்டு நாட்களையும் சேர்த்தால் மொத்தம் 22 ஓவர்கள் வீசப்படாமல் போகி இருக்கின்றது. இதற்கு எல்லாம் அபராதம் விதித்தால் வேலைக்கே ஆகாது. ஏனென்றால் இந்த வீரர்கள் எல்லாம் தற்போது செல்வந்தர்களாக இருக்கின்றார்கள்.

எனவே பணம் என்பது அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. லண்டனில் எதிர்பாராத விதமாக வெயில் சுட்டு எரிக்கின்றது. வீரர்களுக்கும் காயம் ஏற்படுகிறது என்று எனக்கு தெரியும். ஆனால் ஐந்தாவது நாள் அன்று கண்டிப்பாக 90 ஓவர்கள் வீசியே ஆகவேண்டும்.

- Advertisement -

தடுக்க என்ன வழி:

ஆனால் ஏன் முதல் நாள் இரண்டாவது நாள் மூன்றாவது நாள் ஆகிய ஆட்டங்கள் நத்தை வேகத்தில் நகர்கிறது என்று எனக்கு தெரியவில்லை. முதல் நாளில் இருந்து 90 ஓவர்கள் வீச வேண்டும் என்று ஏன் யாரும் வற்புறுத்துவது கிடையாது. இதை தடுக்க என்ன வழி என்று யோசிக்க வேண்டும்.
முதல் நாளில் எவ்வளவு ஓவர் வீசப்பட்டதோ அது போல் இரண்டாவது நாளும் வீசப்பட வேண்டும்.

இதையும் படிங்க: இங்கி பண்ற வேலைய வெளியே சொல்லி.. பைன் கட்ட விரும்பல.. என்னவோ செய்யட்டும் – பும்ரா வருத்தம்

இதுவே ஐந்தாவது நாள் அன்று பாருங்கள். நடுவர்கள் 90 ஓவர்கள் வீசப்படுவதற்காக வீரர்களை போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று வற்புறுத்துவார்கள். இடைவேளைகள் பெரும் அளவு இருக்காது. நடுவர்கள் போட்டியை மிகவும் சிம்பிளாக வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் 90 ஓவர்கள் ஐந்தாவது நாள் அன்று வீசப்படும். இதை ஏன் மற்ற நாள் அன்று செய்யக்கூடாது என்று மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -