இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முடிவெடுப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு மிகவும் காட்டமான முறையில் பதில் அளித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தற்பொழுது தொடர் தற்காலிகமாக சமநிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
விமர்சிக்கப்படும் ஸ்டோக்ஸ் முடிவு
இந்த தொடரில் நடந்து முடிந்திருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது விமர்சனமாக மாறியிருக்கிறது. காரணம் பேட்டிங் செய்வதற்கு நல்ல சூழ்நிலை காணப்பட்ட போதும் கூட பந்துவீச்சை தேர்வு செய்தது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் இந்திய அணியை இரண்டு இன்னிங்ஸிலும் 700 ரண்களில் கட்டுப்படுத்தி அதை சுலபமாக சேஸ் செய்து விட முடியும் என இங்கிலாந்து அணி நினைக்கிறது. இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து வருவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
பென் ஸ்டோக்ஸ் கோபம்
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள பென் ஸ்டோக்ஸ் கூறும்போது “நாங்கள் டாஸ் விஷயத்தில் சிக்கிக் கொள்ளவில்லை என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இதை கூறுகிறேன். இதெல்லாம் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வானம் மேகமூட்டமாக இருந்த காரணத்தினால் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தேன்”
இதையும் படிங்க : ஆகாஷ் தீப் பவுலிங் சிறப்பா இருக்க.. யாருக்கும் தெரியாத காரணம் இதுதான்.. தப்பிக்க முடியாது – அஸ்வின் விளக்கம்
“அதே சமயத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது மாறி சூரியன் வெளியே வந்துவிட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து எனக்கு தெரிய நான் வானிலை மையத்தில் வேலை செய்யவில்லை. காலை 10:30 மணிக்கு என்ன நடக்கும் என எனக்கு தெரியாது. நான் அப்போதைய சூழ்நிலைக்கு முடிவெடுக்கிறேன். மேலும் அடுத்த ஒரு வாரம் லார்ட்ஸ் மைதானத்தில் நல்ல வெயில் அடிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே யாராக இருந்தாலும் இதை வைத்தே முடிவுகள் எடுப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.






