மழை குறித்து சுப்மன் கில்லை நேற்றே எச்சரித்த இங்கிலாந்து வீரர்.. தாமதமாக டிக்ளேர் செய்ததால் வெற்றி வாய்ப்பு பாதிப்பு?

0
461

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதித்திருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இவ்வளவு பெரிய இலக்கு தேவையில்லை என்றும் 500 அல்லது 550 ரன்களை கடந்திருந்தபோதே இந்திய அணி இங்கிலாந்தை பேட்டிங் செய்ய பணித்திருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

மழை வரும் என எச்சரிக்கை:

இந்த சூழலில் யாருமே எதிர்பாராத வகையில் ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஐந்தாவது நாளில் முதல் சில ஓவர்கள் வீச முடியாமல் இருந்தது. இதனால் ஆட்டம் மிகவும் தாமதமாக தொடங்கியது.

இந்த சூழலில் 5வது நாள் அன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு அறிக்கைகள் தெரிவித்து இருந்ததாக கிரிக்கெட் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில் நேற்று இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிக்கொண்டிருந்த போது இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், கேப்டன் சுப்மன் கில்லை 5வது நாளில் மழை வரும் என எச்சரித்திருந்தார்.

- Advertisement -

விறுவிறுப்பான ஆட்டம்:

இந்த வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது. அதில் கில் அதிரடியாக பேட்டிங் விளையாடிக் கொண்டிருந்தபோது நாளை மழை பெய்யும் என்று ஹாரி புரூக் கூறியிருந்தார். அதற்கு கில், அது எங்களுடைய துரதிர்ஷ்டம் என்ன செய்வது என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: 5வது நாள்.. இந்தியாவின் வெற்றிக்கு குறுக்கே நிற்கும் மழை.. போட்டியை வெல்ல முடியுமா?.. வானிலை அறிக்கை

அதற்கு மீண்டும் பதில் அளித்த ஹாரி  புரூக்,  அப்போது டிராவுக்கு ரெடி ஆகிக் கொள்ளுங்கள் என்று கூறி கிண்டல் அடித்திருந்தார். நேற்று ஹாரி புரூக் கில்லை எச்சரித்த நிலையில் தற்போது அவர் சொன்னது போல் மழை பெய்து வருவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில் இந்திய அணி 4வது   விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறது. இங்கிலாந்து வீரர் ஆலி போப் ஆட்டமிழந்தார். இந்த சூழலில் இன்னும் வெற்றிக்கு ஆறு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இதனால் போட்டியில் விறுவிறுப்பு கூடி இருக்கிறது.

- Advertisement -