இந்திய அணிக்கு தொடரும் 10 நிமிட சோகம்.. 11 ரன்னில் ஜடேஜா தவறவிட்ட மகத்தான சாதனை.. 2வது டெஸ்ட்

0
499
Jadeja

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் ரவீந்திர ஜடேஜா வெறும் 11 ரன்னில் எந்த இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் செய்யாத சாதனையை தவறவிட்டார்.

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் வில் 114 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.

- Advertisement -

அசத்திய ஜோடி

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் போட்டியை தொடர்ந்து விளையாடிய கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. கில் 150 ரன்கள் தாண்டினார். அடுத்து ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து வேகமாக சதத்தை நோக்கி முன்னேறிய ரவீந்திர ஜடேஜா 89 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இன்றைய முதல் செஷன் போட்டி முடிவடைவதற்கு 10 நிமிடங்கள் இருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளாக இந்திய அணி ஒரு நாளின் முதல் செஷன் முடிவில் 10 நிமிடங்கள் இருக்கும் பொழுது விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த சோகம் இன்றைய நாளிலும் தொடர்ந்து.

- Advertisement -

வரலாற்று சாதனை தவறுயது

இந்த போட்டி நடைபெற்று வரும் பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இதுவரையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் நால்வரும் தலா ஒரு டெஸ்ட் சதம் எடுத்திருக்கிறார்கள். இந்த மைதானத்தில் இரண்டு சதங்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் கிடையாது.

இதையும் படிங்க : கபில்தேவ், கும்பளேவே செய்யாத சாதனை.. இங்கிலாந்து மண்ணில் சாதித்து காட்டிய ஜடேஜா

இந்த நிலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த இங்கிலாந்து மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் சதம் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பதற்கு ஜடேஜாவுக்கு அருமையான வாய்ப்பு இருந்தது. ஆனால் இறுதியாக 11 ரன்னில் அந்த வாய்ப்பு தவறி போனது. தற்போது இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 419 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருக்கிறது.

- Advertisement -