இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் இந்திய அணி ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து எந்த மாற்றத்தையும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு செய்யவில்லை.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள்
இந்த போட்டிக்கு இந்திய அணியில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக பணிச்சுமை காரணமாக பும்ரா விளையாட வைக்கப்படவில்லை. அதே சமயத்தில் குல்தீப் யாதவ் விளையாட வைக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரையும் விளையாட வைக்கவில்லை.
இந்த நிலையில் சாய் சுதர்ஷன், சர்துல் தாக்கூர் மற்றும் பும்ரா மூவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் மூவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே ஒரு போட்டியில் அறிமுக வாய்ப்பை கொடுத்துவிட்டு சாய் சுதர்சனை நீக்கி இருப்பது இந்திய அணி ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.
கில் தெரிவித்த கருத்து
அடுத்த டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கின்ற காரணத்தினால் அங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் என்பதினால் பும்ராவை இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கவில்லை எனில் கூறியிருக்கிறார். மேலும் குல்தீப் யாதவை விளையாட வைக்க விரும்பினாலும் கீழ் வரிசை பேட்டிங் பலமாக இல்லாததால் விளையாட வைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : கில் தமிழக வீரருக்காக அந்த கேலிக்கூத்த பண்ணிடாதீங்க.. தப்பான மரத்தை பார்த்து குரைக்காதீங்க – ஆகாஷ் சோப்ரா அறிவுரை
இத்துடன் தாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் கூட முதலில் பந்து வீசி இருப்போம் எனவும், இந்த ஆடுகளத்தில் ஏதாவது உதவி இருந்தால் அது முதல் நாளில் மட்டுமே கிடைக்கும் என்றும் வருத்தப்பட்டு இருக்கிறார். தற்போது இந்திய பிளேயிங் லெவனின் தேர்வு ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.






