இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஏனென்றால் 6 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 4வது நாள் ஆட்ட் தொடக்கத்தில் 92 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கில் விக்கெட்டை இழந்தது. மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் அரைசதம் அடித்தார்.
கில் விக்கெட்:
இந்த சூழலில் இந்த ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் நிர்ணயிக்க வேண்டும்? இங்கிலாந்து வீரர்கள் அதிரடி காட்டுவார்கள் என்பதால் எந்த இலக்கு பாதுகாப்பானது என்று பல கேள்விகள் இந்திய அணி மத்தியில் இருந்தது. கில் விக்கெட் இந்தியாவுக்கு ஒரு பெரும் பின்னடைவாக கருதப்பட்டாலும், அது இந்திய அணியின் பவுலர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.
ஏனென்றால் கடைசி இரண்டு நாட்களில் ஆடுகளம் சிதலமடைந்து அது ரன் சேர்க்க கடினமாக மாறும். ஆனால் இந்த லீட்ஸ் ஆடுகளம் சிதலம் அடையுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் கில் விக்கெட் அதற்கான விடையை கொடுத்திருக்கிறது. பிரைடல் கார்ஸ் வீசிய பந்து ஒன்று ஆடுகளத்தில் இருந்த விரிசல் ஒன்றில் பட்டு பந்து எதிர்பாராத விதமாக சென்றது.
சிதலமடையும் ஆடுகளம்:
இதனை கணிக்க தவறிய கில் அதனை அடிக்க முற்பட்டு பந்து ஸ்டெம்பில் விழுந்தது. இது சோகமான அவுட் ஆக பார்க்கப்பட்டாலும், இந்திய பவுலர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆடுகளம் இன்னும் போகப் போக மேலும் சிதலம் அடையும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
இதையும் படிங்க: நான் 6 மாசம்தான் ஆடுவேனு அவங்க சொன்னாங்க.. இத கடவுள் கிட்டயே விட்டுட்டேன் – பும்ரா உருக்கமான பேச்சு
இதன் மூலம் இந்திய அணியின் பவுலர்கள் நல்ல முறையில் பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும். குறிப்பாக ஜடேஜா போன்ற சுழற் பந்துவீச்சாளர் ஆடுகளத்தில் உள்ள விரிசலை பயன்படுத்தி விக்கெட்டுகள் வீழ்த்த முடியும். இதனால் இந்த ஆடுகளத்தில் 250 அல்லது 300 ரன்கள் மேல் இலக்கு வைத்தாலே, இந்தியா வெற்றி பெற போதுமானதாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.






