இந்திய வீரர் ரகானே இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தனது இந்திய பிளேயிங் லெவனை தெரிவித்திருக்கிறார். ஆச்சரியப்படும் விதமாக அவர் கருண் நாயரை சேர்க்கவில்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கருண் நாயரை விளையாட வைப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கில்லுக்கு சவாலாக இருக்கும்
இதுகுறித்து பேசி இருக்கும் ரகானே கூறும்பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக நீங்கள் எப்பொழுதும் முன் முயற்சி உடன் இருக்க வேண்டும். எனவே இது கில்லுக்கு சவாலான வேலையாக இருக்கும். ஆனால் அவர் சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கேப்டனாக இருப்பது வேறு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக இருப்பது வேறு”
“டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் உங்கள் எதிரணியை விட நீங்கள் ஒரு படி இரண்டு படி முன்னே இருக்க வேண்டும். உங்கள் வந்து வீச்சாளர்களுடன் பேச வேண்டும். விஷயங்களை திட்டமிட வேண்டும். இதனால்தான் சவாலாக இருக்கப் போகிறது. இருந்தாலும் அவர் இதில் எல்லாம் தாண்டி சிறப்பாக வந்து விடுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
கருண் நாயருக்கு இடமில்லை
மேலும் ரகானே தேர்ந்தெடுத்து இருக்கும் தனது இந்திய பிளேயிங் லெவனில் பேட்டிங் யூனிட்டில் ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல் சாய் சுதர்சன், கேப்டன் கில், துருவ், ஜுரல் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை வைத்திருக்கிறார். கருண் நாயர் சிறப்பான முறையில் எல்லா பக்கத்திலும் விளையாடி இருந்தாலும் அவரை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் கேப்டனா இருந்தா.. ரிஷப் பண்ட் கிட்ட இப்படி ஆடத்தான் சொல்லுவேன் – சச்சின் வித்தியாச அறிவுரை
ரகானே பிளேயிங் XI : யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கே), துருவ் ஜூரல், ரிஷப் பந்த் (வி.க.), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.






