டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப இவரால் மட்டுமே முடியும்.. அந்தத் திறமை நிறைய இருக்கு – இந்திய முன்னாள் வீரர்

0
120

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி இதற்காக தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் விராட் கோலியின் பேட்டிங் இடத்தை நிரப்ப இவரால் மட்டுமே முடியும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபத்தில் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி நான்காவது இடத்தில் இதுவரை களமிறங்கி விளையாடி வந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

டெஸ்ட் அணிக்கு புதிய வரவு கொடுத்துள்ள கருண் நாயர் மற்றும் சில திறமையான இளம் வீரர்கள் இருந்தாலும் விராட் கோலியின் நம்பர் 4 இடத்தை நிரப்ப கேஎல் ராகுலால் மட்டுமே முடியும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். வெளிநாட்டுத் தொடர்களில் கே எல் ராகுலின் திறமையை வைத்து பார்க்கும் போது அவரால் வந்த வரிசையில் விளையாட முடியும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இவரால் மட்டுமே முடியும்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி இல்லாத நிலையில் கே எல் ராகுலின் பங்கு மகத்தானது. அவரை நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாடக்கூடிய ஒரு பேட்ஸ்மேனாக பார்க்கிறேன். பலர் வெவ்வேறு இடங்களை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் நான்காவது இடத்தில் விராட் கோலியின் பாத்திரத்தை மாற்றவோ அல்லது எடுததுக் கொள்ளவோ கேஎல் ராகுல் எனக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என தோன்றுகிறது. அந்த நான்காவது இடத்தில் தொடக்கத்தில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால், கேஎல் ராகுல் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.

இதையும் படிங்க:இங்கி முதல் டெஸ்ட்.. இந்திய பிளேயிங் XI.. 6 பவுலர்கள்.. 8 பேட்டர்கள்.. ரவி சாஸ்திரி அசத்தல் ஐடியா

அவரிடம் சரியான வகையான பேட்டிங் நுட்பம் இருக்கிறது. இங்கிலாந்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு ஒரு மிகச் சிறப்பான குணம் இருந்திருக்கிறது. கடந்த ஒன்றரை சீசன்களில் நிறைய முதிர்ச்சி வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனவே இந்திய அணி நிர்வாகத்தின் பொறுப்பு அதுதான் என்று நினைக்கிறேன்” என அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -