2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏமாற்றம் அடைந்த பிறகு, ஷ்ரேயஸ் ஐயர் மும்பை டி20 லீக் 2025-ல் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியை வழிநடத்தி தற்போது பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்திருக்கிறார். பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சிறந்த வீரர்களை உள்ளடக்கிய இந்தத் தொடரில், தனது அணி பிளேஆஃப்ஸுக்கு தகுதி பெறுவதில் ஸ்ரேயாஸ் முக்கிய பங்கு வகித்தார்.
சோபோ மும்பை ஃபால்கன்ஸ் பிளேஆஃப்ஸுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து, ஐயரிடம் கேப்டனாக அவரது செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, கேப்டன்ஷிப் என்பது முதிர்ச்சி மற்றும் பொறுப்புணர்வைப் பற்றியது என்று கூறினார். இது குறித்து பேசிய அவர்,
“கேப்டன்ஷிப் நிறைய முதிர்ச்சியையும் பொறுப்புணர்வையும் தருகிறது.”
“எப்போதும் உங்களிடமிருந்து சிறந்த பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணி எதிர்கொள்ளும் தடைகள் அல்லது பிரச்சினைகளின் போது எல்லோரும் கேப்டனை நோக்கி வருவார்கள். நான் 22 வயதிலிருந்து கேப்டனாக இருந்து வருகிறேன்.”
கேப்டன் அனுபவம் குறித்து பேச்சு:
“இதனால் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. இந்த தருணங்களை நான் ரசித்தேன், அதை முழுமையாக ஏற்றுக்கொண்டேன். முன்னணியில் நின்று வழிநடத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் கேப்டனான ஐயரிடம், பதற்றமான சூழல்களை எவ்வாறு கையாள்வது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் எனது மனநிலையில் மூழ்க முயற்சிக்கிறேன், முன்னால் உள்ளவற்றைச் செய்ய முயல்கிறேன். முடிந்தவரை கவனத்துடன் இருக்க முயற்சிக்கிறேன். தற்போதைய தருணத்தில் இருக்கிறேன்.”
கொண்டாட வைக்கனும்:
“சூழ்நிலையை ஏற்றுக்கொள்கிறேன். கூட்டத்தை உற்சாகப்படுத்துகிறேன். ஏனெனில், சில நேரங்களில் அவர்கள் மிகவும் உற்சாகமாகி, உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறார்கள். எனவே, கூட்டம் என் பெயரை கொண்டாட வைக்க வேண்டும் என்று நான் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.”
இதையும் படிங்க: விராட் கோலியின் பெயரை காப்பாற்றனும்.. அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்.. மாண்டி பனேசர் கருத்து
“அது ஒருவித உந்துதலை அளிக்கிறது” என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். இந்திய டெஸ்ட் அணியில் தற்போது ஸ்ரேயாஸ், இடம்பெறாத நிலையில், அவர் இந்த தொடருக்கு பிறகு ஓய்வு எடுக்க போகிறாரா இல்லை கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து செல்லப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.






