பும்ரா விஷயத்தில் இந்திய அணி எடுத்தது சரியான முடிவு.. இவர் அதுக்கு செட் ஆக மாட்டார் – ஆஸி ரிக்கி பாண்டிங் கருத்து

0
72

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 20ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் அணிக்கு இளம் வீரர் சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன்

இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இது இந்திய அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பழைய தோல்விகளை கருத்தில் கொண்டு புதிய கேப்டனுக்கான தேடலை அப்போதே ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும் முன்னாள் வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இளம் வீரர் சுப்மான் கில்லை கேப்டனாக அறிவித்தது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படாதது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் பும்ரா கேப்டன் ஆகாத காரணத்தை விளக்கி கூறி அந்த முடிவு சரியானது தான் என எடுத்துரைக்கிறார். மேலும் கில் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட்டது எதிர்கால இந்திய அணியை உருவாக்க சிறப்பானதாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் கருத்து

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய கிரிக்கெட் அணி செய்தது சரியான நடவடிக்கை தான் என்று நினைக்கிறேன். மேலும் அணியில் பல சீனியர் வீரர்கள் மற்றும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். பும்ரா கேப்டனாக நியமிக்கப்படாததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அந்த விஷயம் என்னை பொறுத்தவரை எளிமையானது தான்.

இதையும் படிங்க:இந்திய டீமில் மட்டுமல்ல.. உலக கிரிக்கெட்டில் கூட இந்த இங்கிலாந்து வீரர் மாதிரி யாரும் இல்லை.. கோச் கம்பீர் புகழாரம்

கடந்த இரண்டு வருடங்களாக பும்ராவின் காயம் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. ஒரு கேப்டனாக நியமிக்கப்படும் போது அந்த விஷயங்கள் புறம் தள்ளி வைக்க வேண்டியவை. ஒரு கேப்டனாக நீங்கள் ஆட்டங்களை தவற விடக்கூடாது. எனவே பும்ரா விஷயத்தில் இந்திய அணி செய்தது சரியான விஷயம் என்று தான் நினைக்கிறேன். கில் இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழி நடத்திய விதம் பார்க்கும்போது அவர் கேப்டனாக பொருத்தமாக இருப்பார் என்று தோன்றுகிறது. கேப்டனாக செய்ய வேண்டிய விஷயம் எனக்கு என்னவென்றால் பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். கில் அதை சரியாக ஐபிஎல்லில் செய்தார். எனவே இது அவருக்கு சரியான நேரம்” என பாண்டிங் கூறியிருக்கிறார்

- Advertisement -