கருண் எங்க இங்கிலாந்து மண்ணுல அசத்த.. இத மட்டும் செய்யுங்க.. பீட்டர்சன் தந்த ஒரு வரி ஐடியா

0
52
Karun

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிகள் இடம் பிடித்திருக்கும் கருண் நாயர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஒரு வரியில் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிவப்பு பந்து மற்றும் வெள்ளை பந்தில் கருண் நாயர் மிகச்சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என நிறைய கோரிக்கைகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் வந்தது.

- Advertisement -

கருண் நாயரின் எழுச்சி

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடக மாநில அணியில் இருந்து விலகி விதர்பா மாநில அணிக்காக கருண் நாயர் தற்பொழுது விளையாடி வருகிறார். இந்த நிலையில் வெள்ளை பந்து கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் வடிவமான விஜய் ஹசாரே டிராபியில் 6 சதங்களுடன் 700 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்திருந்தார்.

மேலும் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபியில் விதர்பா அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக அவர் 30 வயதை தாண்டிய பிறகும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு இந்திய அணியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் கடந்த ஆண்டு முதல் இங்கிலாந்து கவுண்டி தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட நட்பு

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கருண் நாயர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விளையாடினார். இதை அணிக்கு மென்டராக இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஒரு வாதி இருக்கிறது.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் செலக்ட் பண்ணல?.. பத்திரிக்கையாளர் கேள்விக்கு கம்பீரின் நச் பதில்.. சிக்கும் வேறொருவர்

இந்த நிலையில் இந்திய ஏ அணியில் இடம் பெற்று இங்கிலாந்து சென்றிருக்கும் கருண் நாயர் தனது பேட்டிங் பயிற்சி செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்திருக்கும் கெவின் பீட்டர்சன் “நேராக விளையாடுங்கள் சிறப்பாக இருப்பீர்கள்” என்று அறிவுரை கூறியிருக்கிறார். இங்கிலாந்து கண்டிஷனில் நேராக விளையாடினால் ஆட்டம் இழக்காமல் பெரிய ரன்கள் எடுக்க முடியும் என்று தனது நண்பருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்!

- Advertisement -