தோனிக்கு நடக்காதது.. ராசியான கேப்டன் ஸ்ரேயாஸ் படைத்த வினோத மோசமான சாதனை.. புள்ளி பட்டியலில் சோகம்

0
66
Shreyas

நேற்று ஐபிஎல் தொடரில் வலிமையான பஞ்சாப் வலிமை குறைந்த டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் காரணமாக கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியும் என்கின்ற நிலை பஞ்சாப் அணிக்கு இருந்தது. டெல்லி அணி இந்தப் போட்டியை வென்று வெற்றியுடன் தொடரை முடிவு செய்ய களம் இறங்கியது.

- Advertisement -

கேப்டன் ஸ்ரேயாஸ் அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஸ்ரேயா செய்ய சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 34 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு இளம் வீரர் சமீர் ரிஸ்வி சிறப்பாக விளையாடி இறுதி வரை களத்தில் நின்று 25 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 58 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். 200 ரன்கள் தாண்டி எடுத்தும் இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு முறை பஞ்சாப் அணி தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் செய்த மோசமான சாதனை

கடந்த முறை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருந்த பொழுது இதே பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 260 ரன்கள் தாண்டி சேஸ் செய்து வெற்றி பெற்றது. 200 ரன்கள் தாண்டி இருந்தாலும் ஸ்ரேயாஸ் கேப்டனாக இருக்கும் பொழுது அதை பாதுகாப்பாக காத்து வெற்றி பெற முடிவதில்லை.

இதையும் படிங்க : 1085 ரன்ஸ்.. 3 நாட்களில் முடிந்த முதல் டெஸ்ட்.. மாஸ் காட்டிய இங்கிலாந்து.. ஜிம்பாப்வே பரிதாப தோல்வி

இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் நான்கு முறை 200 ரன்கள் தாண்டி கேப்டனாக பாதுகாக்க முடியாதவராக இருந்திருக்கிறார். ஒரு கேப்டனாக 4 முறை பாதுகாக்க தவறி, அதிக முறை ஐபிஎல் தொடரில் 200 ரன்கள் பாதுகாக்க முடியாதவர் என்ற மோசமான சாதனையையும் படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனியை தாண்டி இந்த மோசமான சாதனையை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -