டெல்லி ஒப்பந்தம் செய்த உடன்.. பாகிஸ்தானுடன் ஆட பறந்த முஸ்தஃபிஸூர்.. இடையில் என்ன நடந்தது?

0
363
DC

நேற்று டெல்லி கேப்பிட்டல் அணி பங்களாதேஷ் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஷூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்த பாகிஸ்தானுடன் விளையாடுவதற்காக யுஏஇ பறந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இதற்கான காரணம் என்னவென்று தெரிய வந்திருக்கிறது.

டெல்லி கேப்பிட்டல் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியா இளம் துவக்க வீரர் ஜாக் பிரேசர் மெக்கார்க் மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு டெல்லி அணியில் இணைய விரும்பவில்லை. தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது திடீரென போட்டி நிறுத்தப்பட்ட பதட்டத்தில் இருந்து அவர் இன்னும் வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

டெல்லி அணிக்கு பலத்த அடி

இவர் டெல்லி அணிக்கு திரும்ப வராதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமையவில்லை. அதே சமயத்தில் அனுபவ இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடருக்கு மீண்டும் வரவில்லை.

ஒரு போட்டியின் எல்லா பகுதிகளிலும் பந்து வீசும் திறமை கொண்ட ஸ்டார்க் மீண்டும் அணிக்கு திரும்பாதது டெல்லி கேப்பிட்டல் அணிக்கு மீண்டும் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. அந்த அணி மீது இருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இத்துடன் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் பிளே ஆப் வாய்ப்பில் இருக்கும் பஞ்சாப் மற்றும் மும்பை உடன் இருப்பது பெரிய பிரச்சனையை உண்டு செய்கிறது.

- Advertisement -

முஸ்தபிஷூர் ரஹ்மான் பிரச்சனை என்ன?

நேற்று டெல்லி அணி நிர்வாகம் பங்களாதேஷின் வேகபந்துவீச்சாளர் முஸ்தபிஷூர் ரஹ்மானை ஜாக் பிரேசர் மெக்கார்க் இடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. மேலும் ஸ்டார்க் இல்லாத இடத்திற்கு இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் டெல்லி அணியின் தலைவலி ஓரளவுக்கு சரியானது.

இப்படியான நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு சில மணி நேரத்தில் அவர் உடனடியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெள்ளை பந்து தொடர்களுக்கு விளையாட யுஏஇ சென்று விட்டார். இந்தத் தொடர் சரியாக ஜூன் மூன்றாம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது முடிவடைகிறது. எனவே அவர் நிச்சயம் டெல்லி அணிக்கு விளையாட முடியாது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025 பிளே ஆப் வாய்ப்புகள்.. 3 டீமுக்கு ஒரு போட்டி போதும்.. மீதி 3 டீம் சுவாரசிய போராட்டம் – முழு விபரங்கள்

இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறப்பட்ட பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களிடம் முஸ்தஃபிசூரை ஒப்பந்தம் செய்வதற்கான தடையில்லா சான்றிதழை கேட்கவில்லை எனவும், தங்களுக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்தது பற்றி எந்த தகவலையும் கூறவில்லை எனவும் சொல்லி இருக்கிறது. நிச்சயமாக அவரால் மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -