சிஎஸ்கே மற்றும் எம்எஸ் தோனி நிச்சயமாக கிடையாது.. என்னை பொருத்தவரை பெஸ்ட் ஐபிஎல் கேப்டன், சிறந்த அணி இதுதான் – மனோஜ் திவாரி

0
12

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. சென்னை அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் கேகேஆர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி சிறந்த ஐபிஎல் கேப்டன் மற்றும் சிறந்த அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே எம்எஸ் தோனி வேண்டாம்

18 வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சம பலம் பொருந்தி இருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் இந்த இரண்டு அணிகளும் டாப் லிஸ்டில் இருக்கும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மனோஜ் திவாரி 2012 ஆம் ஆண்டு கேகேஆர் ஐபிஎல் கோப்பையை வென்ற போது அதில் முக்கிய வீரராக திகழ்ந்தார். இவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் எம்எஸ் தோனி இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என மறைமுகமாக அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறந்த அணி மற்றும் சிறந்த கேப்டனை தேர்வு செய்திருக்கிறார்.

- Advertisement -

சிறந்த ஐபிஎல் அணி மற்றும் கேப்டன்

இதுகுறித்து மனோஜ் திவாரி கூறும்போது “எனக்கு இதுவரை கிடைத்த ஐபிஎல் போட்டி என்றால் 2012 ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்காக விளையாடியது தான். அந்த வருடம் தான் கொல்கத்தா அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அப்போது கொல்கத்தா அணி பட்டத்தை வெல்ல வேண்டும் என்கிற அழுத்தம் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் இறுதிப்போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக பங்களிக்கும் அளவுக்கு நான் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருந்தேன். அந்த ஆண்டில் நாங்கள் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு சாம்பியனாக மீண்டு வந்த விதம் மறக்க முடியாது.

இதையும் படிங்க:டெல்லி போட்டியில் சுவாரசியம்.. ஐபிஎல் உலகில் முதல் கேப்டனாக கம்மின்ஸ் படைத்த 2 அற்புத சாதனைகள்.. DC vs SRH.. ஐபிஎல் 2025

என்னை பொருத்தவரை சிறந்த ஐபிஎல் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான். அதேபோல சிறந்த ஐபிஎல் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்கிறேன்” என்று மனோஜ் திவாரி பேசியிருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மனோஜ் திவாரி எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே அணியை புறக்கணித்துவிட்டு சிறந்த அணியாக கொல்கத்தா அணியையும் சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்திருக்கிறார்.

- Advertisement -