200+ ரன்ஸ்.. கேப்டனாக ஹர்திக் பாண்டியா அபாரம்.. சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை உடைத்து மாஸ் சாதனை.. ஐபிஎல் 2025

0
180

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் அதிகபட்சமாக 32 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 58 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்க்ரம் 9 ரன்னில் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஜோடி ஓரளவு லக்னோ அணியை காப்பாற்றியது. ஆனால் எதிர்பாராத விதமாக பூரான் 15 பந்துகளில் 27 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா சாதனை

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த சீசனைப் பொறுத்தவரை தொடக்கத்தில் 5 போட்டிகளில் நான்கில் தோல்வி அடைந்திருந்த மும்பை அணி அதற்குப் பிறகு ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 200க்கும் அதிகமான ரன்கள் அடித்து அதனை மூன்றாவது முறையாக எதிர் அணியை சேசிங் செய்ய விடாமல் வெற்றி பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க:என்னை பற்றி இப்போ யோசிக்காம இருப்பதே நல்லது.. குழு விளையாட்டில் ஒருவரை தப்பு சொல்வது சரியல்ல – கேப்டன் ரிஷப் பண்ட்

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் சனியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஹர்திக் பாண்டியா இந்த போட்டியின் மூலமாக முறியடித்திருக்கிறார். சச்சின் தலைமையில் 2 முறை வெற்றி பெற்ற மும்பை அணி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் முதலிடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் தலைமையில் மும்பை அணி 10 முறை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -