தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் டிவால்ட் பிரிவியஸ் இடையில் வாங்கப்பட்டு இருக்கிறார். சிக்ஸர் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் சிஎஸ்கே அணிக்கு இவரது பேட்டிங் கை கொடுக்குமா? என பார்க்கலாம்.
இவரது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் பரபரப்பானதாக இருந்தது. இவர் தென் ஆப்பிரிக்காவில் லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் போலவே பேட்டிங் செய்கின்ற காரணத்தினால் அனைவரது கவனத்தையும் எளிதாக கவர்ந்தார். இவரை எடுத்ததும் முதலில் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதைத்தொடர்ந்து அந்த அணி கழட்டி விட கடைசி ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணிகளும் வாங்கவில்லை.
சிஎஸ்கே அணியில் எந்த இடம் கிடைக்கலாம்?
தற்போது சிஎஸ்கே அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்தரா மற்றும் சேக் ரசீத் இருவரும் தொடர்வார்கள் என்று தெரிகிறது. நான்காவது இடத்தை பொருத்தவரையில் பவர் பிளே தாண்டி விக்கெட் விழுந்தால் சிவம் துபே கலம் இறங்குவார். எனவே இந்த மூன்று இடங்களுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு சரியான பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். இந்த இடத்தில் விளையாடி வரும் ராகுல் திரிபாதி மிக மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். எனவே நாளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கலாம் என்று நம்பப்படுகிறது.
குட்டி ஏபிடி 20 புள்ளி விபரம்
டிவால்ட் பிரிவியஸ் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 76 டி20 போட்டிகளில் விளையாடி 1233 பந்துகளை சந்தித்து 1787 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இவருடைய ரன் சராசரி 26.27 என்றும், ஸ்ட்ரைக் ரேட் 144.93 என்றும் இருக்கிறது. இவர் 123 பவுண்டரிகள் மற்றும் 123 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். மேலும் 10 பந்துக்கு ஒரு முறை சிக்ஸர் அடிக்கிறார். இத்துடன் இவர் அடித்துள்ள மொத்த ரண்களில் 42% சிக்ஸரால் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடைசியாக இவர் விளையாடிய சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் 10 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்து 158 பந்துகளை சந்தித்து 291 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடைய ரன் ஆவரேஜ் 48.50 என்றும், ஸ்ட்ரைக் ரேட் 184.17 என்றும் மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் இந்த தொடரில் இவர் 6.32 பந்துக்கு ஒருமுறை சிக்ஸர் அடித்திருக்கிறார். மேலும் இந்த தொடரில் 17 பவுண்டரிகள் மற்றும் 25 சித்தர்கள் மொத்தமாக அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி பற்றிய பேச்சை தடுத்து நிறுத்திய அஸ்வின்.. சிஎஸ்கே பற்றி பேசாத காரணம் என்ன? – அவரே சொன்ன தகவல்
இதை வைத்து பார்க்கும் பொழுது அவரது சமீபத்திய டி20 பேட்டிங் ஃபார்ம் மிகவும் சிறப்பாக இருப்பது தெரிகிறது. மேலும் தோராயமாக நான்கு பந்துகளுக்கு ஒருமுறை அவரால் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க முடிகிறது என்று தெரிகிறது. அவருடைய ரன் ஆவரேஜ் சீராக ரன் குவிப்பதையும், ஸ்ட்ரைக் ரேட் அதிரடியாக ரன் குவிப்பதையும் காட்டுகிறது. எனவே சிஎஸ்கே அணியின் சிக்ஸர் பஞ்சத்தை இவரால் தீர்க்க முடியலாம். இத்துடன் இவர் பகுதி நேரமாக லெக் ஸ்பின் வீசுவார். ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இவர் சிஎஸ்கே அணிக்கு நல்ல வரவாக இருக்கிறார்!






