நடப்பு ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு வெளியாகி இருக்கும் ஒரு புள்ளி விபரம் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டக்கூடிய அளவுக்கு அமைந்திருக்கிறது.
நேற்று ஐபிஎல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கேஎல்.ராகுல் தனி ஒரு வீரராக பேட்டிகள் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
கேஎல்.ராகுலின் ஆக்ரோஷம்
நேற்றைய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இது கேஎல்.ராகுலுக்கு சொந்த மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி தன்னை வாங்கும் என்று அவர் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவருக்காக ஏலத்தில் ஆர்சிபி அணி செல்லவே இல்லை. இது அவருக்கு பெரிய மன வருத்தத்தை உண்டு செய்திருக்கலாம்.
இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கான ஆடுகளம் மெதுவாக இருந்த பொழுது ஆர்சிபி அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய டெல்லி அணிக்கும் விக்கெட்டுகள் சரிந்தன. இந்த நிலையில் ஒருமுனையில் நிலைத்து நின்ற விளையாடிய கேஎல்.ராகுல் இறுதிவரை போட்டியை எடுத்துச் சென்று 53 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மாவின் ஐபிஎல் சரிவு
நேற்று கேஎல்ராகுல் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றார். அவருக்கு இது ஐபிஎல் தொடரில் 15வது ஆட்டநாயகன் விருதாக அமைந்தது. இந்த நிலையில் கேஎல்.ராகுல் ஐபிஎல் தொடரில் 5வது ஆட்டநாயகன் விருது வென்ற பொழுது ரோஹித் சர்மா 18 ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருக்கிறார். இப்பொழுது கேஎல்.ராகுல் 15வது ஆட்டநாயகன் விருதை வெல்லும் பொழுது ரோஹித் சர்மா 19 ஆட்டநாயகன் விருது மட்டுமே வென்றிருக்கிறார்.
ஐபிஎல் தொடர்களில் கேஎல்.ராகுல் 13 ஆட்டநாயகன் விருது பெற்ற காலகட்டத்தில் ரோஹித் சர்மா ஒரே ஒரு ஆட்டநாயகன் விருது மட்டுமே வென்றிருக்கிறார். அந்த அளவிற்கு அவருடைய பேட்டிங் ஃபார்ம் ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. இந்த புள்ளி விபரம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் பேட்டிங்கில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்பதை தெளிவாக்குகிறது.
இதையும் படிங்க : தோனி வித்தியாசமான ஒரு மிருகம்.. சிஎஸ்கேவுக்கு ஆடினா இதை செய்யணும் இல்லனா வேணாம் – கங்குலி பேச்சு
ஐபிஎல் தொடரில் அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் :
ஏபி.டிவில்லியர்ஸ் – 25
கிறிஸ் கெயில் – 22
ரோகித் சர்மா – 19
விராட் கோலி – 18
டேவிட் வார்னர் – 18






