நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு சிஎஸ்கே அணிக்கு மீண்டும் தோனி கேப்டன் ஆகிறார் என்கின்ற அதிகார அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக கேப்டன் ருதுராஜின் கேப்டன்சி மிகவும் சுமாராக இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து நான்கு படுதோல்விகளை சந்தித்து இருக்கிறது. மேலும் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கும் தள்ளப்பட்டு இருக்கிறது.
மீண்டும் கேப்டன் ஆகிறார் தோனி
இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங் எஞ்சி இருக்கும் போட்டிகளுக்கு சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என அறிவித்திருக்கிறார். மேலும் சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மகேந்திர சிங் தோனி ஏற்கனவே ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக கொண்டு வந்த தொடரில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது. அப்பொழுது ரவீந்திர ஜடேஜா காயத்தின் காரணமாக வெளியேற மேற்கொண்டு கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு தோனி பொறுப்பேற்று வழி நடத்தினார். ஆனால் ரவீந்திர ஜடேஜா அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெளியேறினார் என்று கூறப்பட்டது.
ருதுராஜுக்கு என்ன நடந்தது?
இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு பந்து கையில் தாக்கி இருந்தது. எனவே அப்போதே காயத்தின் காரணமாக ருதுராஜ் விளையாட மாட்டார் தோனி கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது இரண்டு ஆட்டங்களுக்கு பிறகு தோனி கேப்டன் ஆவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : ஆர்சிபி ஃபேன்சை பார்த்து கத்துக்கணும்.. அஸ்வின் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறைமுக அறிவுரை
இதில் இன்னொரு அதிர்ச்சி விஷயமாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்து கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே நடப்பு ஐபிஎல் தொடரில் இனி ருதுராஜ் விளையாட மாட்டார். ஏற்கனவே சிஎஸ்கே அணி சிக்கலில் இருக்க பார்மில் இருந்த ஒரு பேட்ஸ்மேன் வெளியேறுவது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.






