தற்போது இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அதிரடியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்து வந்த ஜோஸ் பட்லர் திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது ஜோஸ் பட்லர் நடப்பு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கை டாப் ஆர்டரில் பேட்டிங்கில் கொடுத்து வருகிறார்.
சோதனை கொடுத்த இந்திய சுற்றுப்பயணம்
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து முடிந்த 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடருக்கு முன்பாக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியா வந்தது. இந்த இரண்டு தொடர்களிலுமே இங்கிலாந்து அணி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற முடியாமல் வெளியேறியது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் மீதும் கேப்டன் ஜோஸ் பட்லர் மீதும் நிறைய விமர்சனங்கள் கிளம்பியது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
புதிய கேப்டன் யார்?
இந்த நிலையில் இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் ஹாரி புரூக் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இவர் துணை கேப்டனாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக தான் முக்கிய வேலைகளை செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. உங்க அணியில் பெரிய பிரச்சினை இருக்கு.. இதை சரி செய்யலனா கோப்பையை மறந்திடுங்க.. காவ்யாக்கு ராயுடு கோரிக்கை
இதுகுறிப்பு கருத்து தெரிவித்திருக்கும் புதிய கேப்டன் ஆரி புரூக் கூறும் பொழுது “இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு கேப்டனாக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டு இருப்பது உண்மையில் எனக்கு பெருமை அளிக்க கூடியது. இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் இங்கிலாந்து ஒரு நாள் அணியை வழிநடத்த வேண்டும் என நான் சிறுவயதிலிருந்து கனவு கண்டு வந்தேன். இப்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்” என்று கூறி இருக்கிறார்.






