லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
லக்னோ அணிக்காக விளையாடும் முதல் போட்டி குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் காயத்தால் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் சற்று பலவீனமாக இருப்பது போல இருக்கிறது. லக்னோ அணியின் பேட்டிங் மிக வலுவாக இருக்கும் நிலையில் பந்துவீச்சில் அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அணி இன்னும் முழுமையான நிலையில் இருப்பது போல தெரியவில்லை. இதனால் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணியில் விளையாடிய ஆகாஷ் தீப்பை 8 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய ஆகாஷ் தீப், மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்தர். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் புதிய அணியில் விளையாடப் போவது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “முதல் போட்டி எனக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஒரு பயிற்சி போட்டியில் விளையாடியுள்ளேன், கிரிக்கெட்டில் மூன்று மாதங்கள் இடைவெளியில் இருக்கும்போது நீங்கள் எவ்வளவு பயிற்சி ஆட்டங்களில் விளையாடினாலும் ஒரு போட்டியில் விளையாடும் வரை தன்னம்பிக்கை வராது. ஜெர்சி மட்டுமே மாறுகிறது ஆனால் ஒரு வீரரின் தரம் அப்படியே இருக்கும்.
இதையும் படிங்க:எங்கள் டெத் பவுலர் அவர்தான்.. ஆட்டத்தை கடைசி வரைக்கும் எடுத்துச் சென்று அவரிடம் விட்ருவோம் – வருண் சக்கரவர்த்தி பேட்டி
எனது நேரத்தை புதிய அணியின் உரிமையாளருடன் நான் மிகவும் ரசிக்கிறேன். காயம் காரணமாக நீண்ட காலம் அணியில் இல்லாவிட்டாலும் நான் தற்போது மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். ஒரு தனி நபராக நீங்கள் உங்கள் செயல்பாட்டில் நம்பிக்கை வைத்து அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் விளையாட்டை எளிதாக வைத்திருக்கும் வரை உங்களுக்கு அனைத்துமே நன்றாக மாறும். போட்டியை பொறுத்தவரை நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்” என்று அவர் கூறியிருக்கிறார்






