நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் பந்து வீச்சில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மிகச்சிறப்பாக செயல்பட்டு 163 ரன்களுக்கு அவர்களை ஆல் அவுட் செய்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பேட்டிங் செய்ய சாதகமான விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்த முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடியான விளையாடி 250க்கும் மேல் ரன்கள் குவிக்கும் என கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் டெல்லி பந்துவீச்சாளர்கள் அசத்தி இருக்கிறார்கள்.
சரிந்த ஹைதராபாத் அதிரடி வீரர்கள்
இந்த நிலையில் போட்டியின் முதல் ஓவர்லேயே அபிஷேக் சர்மா பரிதாபமாக ஒரு ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சில் இஷான் கிஷான் 2, நிதீஷ் குமார் ரெட்டி 0, டிராவிஸ் ஹெட் 22 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். பவர் பிளேவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிக்கியது.
இதைத்தொடர்ந்து அதிரடி வீரர் ஹென்றி கிளாசன் வழக்கம்போல் அவரது பாணியில் விளையாடி 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து மோகித் சர்மா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் அன்-கேப்டு பிளேயர் அன்கித் வர்மா 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 74 ரன்கள் குவித்தார்.
மிட்சம் ஸ்டார்க் செய்த சம்பவம்
இதற்கு அடுத்து அபிநவ் மனோகர் 4, கேப்டன் கம்மின்ஸ் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கடுத்து மீண்டும் கடைசி கட்டத்தில் பந்துவீச்சுக்கு வந்த மிட்சல் ஸ்டார்க் வியான் முல்டர் 9 மற்றும் ஹர்சல் படேல் 5 ரன்கள் என வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையும் படிங்க : இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் அறிவிப்பு.. 5டி20, 3 ஒருநாள் போட்டி அட்டவணை அறிவிப்பு.. எப்போது?
இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். டெல்லி கேப்பிட்டல் அணிக்கு கடைசியாக அமித் மிஸ்ரா 2008 ஆம் ஆண்டு ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இதற்கு அடுத்து 17 வருடங்கள் கழித்து டெல்லி கேப்பிட்டல் அணிக்காக மிட்சல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.






