அந்த 4 பேரால இவர் திறமை மும்பை அணிக்கு தெரியல.. சன்ரைசர்ஸ் அவருக்கு அற்புதமான இடம் – சஞ்சய் பாங்கர் பேட்டி

0
354

சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணி இந்த ஐபிஎல் தொடரில் தங்கள் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பாங்கர் இசான் கிசான் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இசான் கிசானுக்கு சிறந்த வாய்ப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக பெரிய தொகைக்கு எடுக்கப்பட்ட வீரரான இசான் கிசான் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்றாவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். தான் இறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இறுதியாக 47 பந்துகளை எதிர்கொண்டு 11 பௌண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 106 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கும் போது மூன்றாவது இடத்தை இவர் ஆக்கிரமித்திருப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் பலத்தைக் கூட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் இசான் கிசான் மும்பை அணியில் பல பெரிய வீரர்களால் மறைக்கப்பட்டதாகவும், சன்ரைசர்ஸ் அணியில் தனது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணியால் மறைக்கப்பட்டார்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அணியில் இடம்பெறாமல் இருந்த போதும், சிறிது காலம் அவருக்கு எந்த ஒரு பக்க பலமும் இல்லாத போதும் இசான் கிசான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரது அணுகு முறையில் தற்போது எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால்,முந்தைய காலங்களில் அவர் மனதில் இருந்த அனைத்து சந்தேகங்களையும் அவர் தீர்த்து வைத்திருப்பதாக தெரிகிறது. அவர் மும்பை அணியில் விளையாடிய போது அணியில் இருந்த மற்ற பிரபலங்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்றவர்களால் அவர் சற்று மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கே அவர் அவராக விளையாட முடியும். தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க:சேப்பாக்கிற்கு அடுத்து இந்த மைதானம் பெஸ்ட்.. டி20 WCல் அன்பான வரவேற்பு கொடுத்தாங்க – எம்எஸ் தோனி நெகிழ்வு

ஏனென்றால் அந்த குறிப்பிட்ட அணியை பார்த்தால், அபிஷேக் ஷர்மா, ஹெட், கிளாஸன் போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்கள் தங்களது சொந்த வேலையை செய்கிறார்கள். ஆனால் ஒரு வீரராக இருந்து முடிவுகளை எப்படி உருவாக்குகிறார் என்பதற்கும், ஒரு வீரர் தன்னை எப்படி பார்க்க தொடங்குகிறார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இது அவருக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக இருக்கப் போகிறது. மேலும் ஹைதராபாத் மைதானத்தில் அடுத்த ஆறு முதல் ஏழு ஆட்டங்களில் அவர் விளையாட போகிறார். எனவே இதன் மூலம் அவர் தனது சிறந்த நிலையை அடைய முடியும்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -