ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் இஷான் கிஷான் தான் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
11.25 கோடிக்கு வாங்கிய வீரர்
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷான் தக்கவைக்கப்பட்ட 5 வீரர்கள் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இதனால் அவரது பெயர் ஏலத்தில் வந்த போது மற்ற அணிகளை விட சன் ரைசர்ஸ் அணி அவரை வாங்குவதற்கு அதிக போட்டி போட்டது. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு மூன்றாவது வரிசை பலவீனமாக இருந்த நிலையில் அதனை நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியாக போராடி 11.25 கோடி ரூபாய்க்கு வாங்கி அணியை கட்டமைத்தது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் எதிர்பார்த்தது போலவே மூன்றாவது வரிசையில் இசான் கிசான் களம் இறக்கப்பட்டார். ஆரம்பம் முதலே தனது அதிரடியை வெளிப்படுத்தி வந்த நிலையில் 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 106 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இசான் கிஷான் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் அணி இதைத்தான் சொன்னது
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் ஏலம் எடுக்கப்பட்ட பிறகு அபிஷேக் சர்மாவை உடனே அழைத்தேன். அப்போது நான் அவரிடம் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டுமா? என்று கேட்டேன். அப்போது அவர், ‘அதுதான் சரி ஒவ்வொரு பந்தையும் அடித்து இந்த அணியில் இருப்பதை அனுபவித்து விளையாடு’ என்று கூறினார். பின்னர் நான் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்த போது அதன் உண்மை நிலையை பார்க்க முடிந்தது.
இதையும் படிங்க:எனக்கும் கோலிக்கும் இனி அந்த பிரச்சனை இல்லை.. நேரத்தை நாங்க இப்படி யூஸ் பண்ணுவோம் – எம்எஸ் தோனி பேட்டி
சன்ரைசர்ஸ் அணி எனக்கு உங்கள் ஏரியாவில் இருந்தால் தைரியமாக அடித்து விளையாடுங்கள் என்று தெளிவான செய்தி அனுப்பப்பட்டது. எனவே இனி நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் அப்படித்தான் விளையாட போகிறோம் என்று நினைக்கிறேன். மோசமான தருணங்களை பற்றி நான் ஒருபோதும் யோசித்ததில்லை என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே நான் கவனமாக இருந்தேன். எதிர்மறை விஷயங்களை நீக்கி விட்டேன். எனது திறமையை காட்ட ஐபிஎல் வரும் என்று நினைத்தேன். சில நல்ல பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே என் வேலையை சிறப்பாக செய்ய கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.






