18 வது ஐபிஎல் சீசன் தொடரை வெற்றிகரமாக தொடங்கி இருக்கும் சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் வருகிற வெள்ளிக்கிழமை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.
விராட் கோலி எம்எஸ் தோனி நட்பு
விராட் கோலி முதன் முதலாக இந்திய அணிக்குள் நுழைந்த போது அப்போதைய இந்திய கேப்டன் எம்எஸ் தோனி அவருக்கு பெரிய ஆதரவை அளித்தார். அவரது பேட்டிங் திறமையை கண்டு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் சீனியர் வீரர்களுக்கு மத்தியில் ஒரு இளம் வீரராக வாய்ப்பு பெற்று விளையாடினார். அப்போது இவர்களுக்கு இடையேயான உறவு காலப்போக்கில் நட்பாக மாறியது. ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் ஐபிஎல் தொடர்களில் பெரும்பாலும் பார்க்கலாம்.
இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி விராட் கோலி குறித்து இதுவரை சொல்லாத விஷயங்களை தற்போது பகிர்ந்து பேசியிருக்கிறார். போட்டியின் போது தாங்கள் செய்ய நினைக்கும் விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொள்வதாகவும், விராட் கோலியை பொருத்தவரை எப்போதுமே சதம் அடிக்க விரும்பக்கூடிய வீரர் என்றும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இனி அந்த பிரச்சனை இல்லை
எம்எஸ் தோனி விராட் கோலி குறித்து கூறும்போது “தொடக்கத்தில் இருந்து விராட் கோலி சிறப்பான பங்களிப்பை அளிக்க விரும்பிய வீரராக இருக்கிறார். அவர் எப்போதுமே 40 அல்லது 60 ரன்கள் எடுப்பதில் திருப்தி அடைய மாட்டார். சதம் அடிப்பதையே இலக்காக கொண்டிருந்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்க விரும்பினார். அந்த வெற்றிக்கான ஏக்கம் விராட் கோலியிடம் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. அவர் அவ்வப்போது போட்டி சூழ்நிலைகளை பற்றி விவாதிப்பார். என்ன செய்யலாம் என்பது குறித்து பகுப்பாய்வு செய்வார்.
இதையும் படிங்க:ரோகித்துக்கு இந்த பிரச்சனை ஒரு விஷயமே இல்ல.. ரியல் அதிரடி இனிமேதான் இருக்கு – கேன் வில்லியம்சன் நம்பிக்கை
உதாரணமாக சேஸ் செய்து கொண்டிருக்கும் போது அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி இருந்தால், அந்த ஓவரில் ரிஸ்க் எடுப்பதை தாமதப்படுத்தி இருக்க முடியுமா? அல்லது அந்த சூழ்நிலையை வித்தியாசமாக கையாண்டிருக்க முடியுமா? என்பது குறித்து பேசுவார். நாங்கள் பல உரையாடல்களை நிகழ்த்தி இருக்கிறோம். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்துள்ளது. ஆரம்பத்தில் ஒரு கேப்டன் வீரருக்கு இடையேயான உறவு தான் எங்களிடத்தில் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது நட்பாக மாறியது. நாங்கள் நண்பர்களாகவே பழகி விட்டோம். ஆனால் ஜூனியர் மற்றும் சீனியருக்கான மரியாதை எப்போதும் இருக்கும். இப்போது நாங்கள் இருவருமே கேப்டன்களாக இல்லாததால் டாஸ் போட செல்ல வேண்டியதில்லை. அந்த நேரத்தில் நாங்கள் அதிக நேரம் அரட்டை அடிப்போம்” என்று பேசியிருக்கிறார்.






