சிஎஸ்கே இல்லை.. பிளே ஆப் சுற்றுக்கு இதுதான் முதல் அணியாக தகுதி பெற வேண்டும் – ஹர்பஜன் சிங் ஆதரவு

0
148

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் மிக வலுவாக இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த ஐபிஎல் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரை இதில் கலந்து கொள்ள உள்ள 10 அணிகளும் தற்போது மிக வலுவான முறையில் இருக்கின்றன. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி அதற்குத் தகுந்த வீரர்களை பத்து அணிகளும் தக்க வைத்தும் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் திறமையான வீரர்களை வாங்கியும் அணிகளை வலுவாக கட்டமைத்தது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஏற்கனவே ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா என ஐந்து வீரர்களை தக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் வில் ஜாக்ஸ், ட்ரெண்ட் போல்ட் என வலிமையான வீரர்களை ஏலத்தில் எடுத்து மும்பை அணியை இன்னும் வலிமையாக்கியது. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனாக இருந்த ஹர்பஜன்சிங் இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை அணி தான் முதல் அணியாக தகுதி பெற வேண்டும் என்று சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுதான் முதலில் தகுதி பெறும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” மும்பை அணியை பார்த்தால் இதுதான் முதலில் தகுதி பெற வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள். அவர்களது பேட்டிங் உறுதியாக உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை மும்பை மைதானத்தில் ஒரு நல்ல சுழற் பந்துவீச்சாளர் தேவை. அதற்கு தான் சாண்ட்னர் மற்றும் கரண் ஷர்மா அவர்களிடம் உள்ளனர். மேலும் அவர் ஒரு லெக் ஸ்பின்னர் பேட்டிங்கும் அவரால் ஓரளவு நன்றாக செய்ய முடியும். தீபக் சகார் புதிய பந்தில் சாதனை செய்திருக்கிறார். போல்ட் மற்றும் தீபக் சகார் நன்றாக ஸ்விங் செய்ய முடியும். எனவே மும்பை ஒரு நல்ல அணியை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:இங்கி டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்கும்.. ஆனா இந்த பிளானை வெச்சு தப்பிச்சுருவாங்க – ஆஸி முன்னாள் கோச்

அணி நன்றாக விளையாடினால்தான் ஹர்திக் பாண்டியா நன்றாக இருப்பார். ரசிகர்களிடையே உள்ள கூச்சலும், அதிருப்தியும் நீங்கி அணி மீண்டும் தனது முத்திரையான கிரிக்கெட்டுக்கு திரும்பும் என்று நான் நம்புகிறேன். ஹர்திக் பாண்டியா ஒரு நிரூபிக்கப்பட்ட கேப்டன், அவர் குஜராத் அணியில் ஏற்கனவே நன்றாக செய்திருக்கிறார். எனவே அவரால் ஏன் மும்பை அணியை சிறப்பாக வழிநடத்த முடியாது? என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். ஹர்பஜன்சிங் சிஎஸ்கே வில் விளையாடியிருந்தாலும் அதன் பெயரை குறிப்பிடாமல் மும்பை அணியின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -