இங்கி டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்கும்.. ஆனா இந்த பிளானை வெச்சு தப்பிச்சுருவாங்க – ஆஸி முன்னாள் கோச்

0
1082

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடருக்கு பிறகு அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீ மேன் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மற்றும் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியடைந்து மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது. எனவே அதற்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளதால் தற்போது அந்த விமர்சனங்கள் அடங்கியிருக்கின்றன. மேலும் தற்போது ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஜூன் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்து செல்லும்.

இந்த தொடரில் கட்டாயமாக இந்திய அணி வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. ஏனென்றால் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்திய அணி வெல்லாததால் அந்தக் குறையை போக்குவதற்கு இந்திய அணி முயற்சி செய்யும். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமன் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெறும் எனவும் அதனை சமாளிக்க இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்று அந்த விமர்சனங்களை அடக்கும் என்கிற ரீதியில் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இதை செய்யும்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்தியா ஒரு சிறந்த கிரிக்கெட் அணி, ஆனால் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்கிறது. அதுதான் இந்த தொடரில் நடக்கப்போகிறது. இங்கிலாந்து அணி கோடை காலத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அணியாக இருப்பார்கள், நிறைய கேள்விகளை எழுப்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். அதற்குப் பின்னர் உண்மையான கேள்விகள் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்லும்.

இதையும் படிங்க:தயவு செஞ்சு அந்த வார்த்தையை.. இனி சொல்ல வேணாம்னு விராட் கோலி கேட்டுக்கிட்டாரு – ஆர்சிபி முன்னாள் வீரர் பேட்டி

அப்போது இந்திய அணி ஒரு நாள் அணியாக மீண்டும் எழுச்சி பெறுவார்கள். எனவே இந்த கோடைகாலத்தில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையும் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று சமாளித்துக் கொள்ளும் என்று கூறியிருக்கிறார். இந்திய அணி அக்டோபர் மாதத்தில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -