ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு விளையாடி இருக்கும் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் சதாப் ஜகாதி இரண்டு அணிகளுக்குமான வித்தியாசம் குறித்து மிகவும் பரபரப்பான கருத்தை கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் நீண்ட காலம் கேப்டனாக இருந்து வந்த சிஎஸ்கே அணி பலமுறை பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதோடு ஐந்து முறை கோப்பையையும் வென்று இருக்கிறது. அதே சமயத்தில் விராட் கோலி தலைமையில் நீண்ட காலம் பயணித்த ஆர்சிபி அணி 17 ஆண்டுகளில் இதுவரையில் ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது.
உங்களுக்கு இதுதான் முக்கியம்
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் ஏன் மேலே கீழே இருக்கின்றது என்பது குறித்து சதாப் ஜகாதி கூறியிருக்கிறார். இவர் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற பொழுது அணியில் இடம் பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கியமான போட்டிகளில் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி சிஎஸ்கே அணியின் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இது குறித்து சதாப் ஜகாதி பேசும்பொழுது “இது ஒரு குழு விளையாட்டு. நீங்கள் கோப்பையை வெல்ல விரும்பினால், ஒரு யூனிட் ஆக சேர்ந்து விளையாட வேண்டும். இரண்டு மூன்று வீரர்கள் உங்களுக்கு கோப்பையை வெல்ல உதவ முடியாது. சிஎஸ்கே அணி எடுத்துக் கொண்டால் நல்ல இந்திய வீரர்கள் மற்றும் ஒழுக்கமான வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் சரியான காம்பினேஷனை பெறுவது மிகவும் முக்கியம்”
ஆர்சிபி இப்படித்தான் செய்யும்
“நான் ஆர்சிபி அணியில் இருந்த பொழுது அவர்கள் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் மீதுதான் கவனம் செலுத்துவார்கள். அணி நிர்வாகம் மற்றும் ட்ரெஸ்ஸிங் ரூம் என இரண்டு அணிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. இரண்டு அணிகளிலும் வீரர்கள் நன்றாக இருந்தார்கள். ஆனால் ஆர்சிபி அணியில் வீரர்களிடையே நல்ல தோழமை இல்லை. அவர்கள் நன்றாக ஜெல் ஆகவில்லை”
இதையும் படிங்க : 13 ஓவரே போதும்.. மாஸ் காட்டிய நியூசிலாந்து.. மீண்டும் பாகிஸ்தான் அணி படுதோல்வி.. தொடரை இழக்கும் நிலை
“நான் சொன்னது போல அணி நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. சிஎஸ்கே அணியில் அணி நிர்வாகம் மிகவும் அருமையாக இருந்தது. அவர்கள் தங்களின் வீரர்களை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். இவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சிறிய விஷயங்கள். இதுதான் நான் இரண்டு அணிகளிலும் உணர்ந்த வேறுபாடுகள்” என்று கூறியிருக்கிறார்.






