நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மெகா ஏலத்தில் இருந்து மிகச் சிறந்த அணியை உருவாக்கி இருப்பதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மிக விரிவாக பேசியிருக்கிறார்.
இந்த முறை ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்க இருக்கிறது. ஐபிஎல் தொடக்க வாரத்தில் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு காயம் காரணமாக கிடைக்க மாட்டார். அதே சமயத்தில் கடந்த ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்து வீசியதின் காரணமாக முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது.
இதைவிட சிறந்த அணி இல்லை
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” மும்பை இந்தியன்ஸ் பலம் என்னவென்றால் இதைவிட ஒரு சிறந்த பிளேயிங் லெவனை உருவாக்க முடியாது என்பதுதான். நீங்கள் ரோகித் சர்மாவில் இருந்து ஆரம்பித்தால் ரியான் ரிகல்டன், வில் ஜேக்ஸ், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர் என அவர்களுடைய பேட்டிங் ஆளம் நம்ப முடியாமல் இருக்கிறது”
“இதற்கு அடுத்து பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் போல்ட், பும்ரா, தீபக் சகர் என்று மும்பை வான்கடே மைதானத்தில் பந்தை ஸ்விங் செய்வதற்கு சிறப்பான மூன்று பேர் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து சுழல் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் சான்ட்னர் மற்றும் முஜீப் ஆகியோர் இருக்கிறார்கள்”
உலகின் சிறந்த சூப்பர் ஸ்டார்கள்
“இந்த அணியிடம் இருக்கும் இன்னொரு சிறந்த விஷயம் என்னவென்றால் இதில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் பெரிய அனுபவங்களை கொண்டு வருகிறார்கள். இந்த அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் உலகம் முழுவதிலும் டி20 லீக்குகள் விளையாடுகிறார்கள். இப்படி அனுபவம் மற்றும் உலகெங்கும் இருக்கும் டி20 லீக் சூப்பர் ஸ்டார்களை ஒருங்கிணைக்கும் சிந்தனையால் இந்த அணி கட்டப்பட்டிருக்கிறது”
இதையும் படிங்க : தோனி ஏன் வெற்றிகரமான கேப்டன் என்று சொல்ல.. இந்த ஒரு விஷயம் போதும் – சிஎஸ்கே முன்னாள் வீரர் உணர்ச்சி பேட்டி
“கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த ஆண்டு ரசிகர்களிடையே வரவேற்பு மிகவும் குறைவாக இருந்தது. அவருக்கு எதிராக மைதானத்திலேயே எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் இந்த முறை அணி மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தற்போது சூழ்நிலை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு மைதானத்தில் ரசிகர்களின் வரவேற்பு இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






