துபாய் எங்க சொந்த நாடு கிடையாது.. ஆஸிக்கு எதிரா இந்த செட்டப்ல வர ஆவலா இருக்கு – ரோகித் சர்மா பேட்டி

0
508
Rohit

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாய் மைதானத்தில் மட்டுமே விளையாடி வருவது சாதகமாக இருக்கின்றது என பலரும் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்திருக்கிறார்.

தற்போது செமி பைனலுக்கு முன்னேறி இருக்கும் இந்திய அணி துபாய் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாளை மோதி இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்படியான பிளேயிங் லெவனுடன் வருவோம்? என்று சூசகமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் திட்டம்

இந்திய அணி லீக் சுற்றின் கடைசி போட்டியில் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்தியை சேர்த்துக்கொண்டு மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி அபார வெற்றி பெற்றது. வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இது குறித்து பேசி இருக்கும் ரோகித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் நான்கு ஸ்பின்னர்களுடன் விளையாடலாம் என்று சிந்தித்தாலும் கூட அவர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாங்கள் என்ன கலவையுடன் செல்ல வேண்டும் என்று யோசிக்க வேண்டும். இது ஆவலான ஒரு விஷயமாக இருக்கிறது. வருண் இப்பொழுது தனது திறமையை காட்டி இருக்கிறார். 2021ல் இருந்ததைவிட தற்பொழுது அவர் மிகவும் துல்லியமாகிவிட்டார்” என்று நினைக்கிறேன்.

- Advertisement -

துபாய் எங்கள் சொந்த ஊர் கிடையாது

“நாங்கள் துபாய் மைதானத்தில் விளையாடி உள்ள மூன்று போட்டிகளிலும் விக்கெட் மேற்பரப்பில் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஆடுகளம் வித்தியாசமாக நடந்து கொண்டது. துபாய் எங்களின் சொந்த மைதானம் கிடையாது. நாங்களும் இங்கு புதிதாகத்தான் வந்திருக்கிறோம். மேலும் இங்கு நாங்கள் அதிக போட்டிகளில் விளையாடியது இல்லை”

இதையும் படிங்க : ஐபிஎல் KKR அணிக்கு யாரும் எதிர்பார்க்காத கேப்டன்.. எல்லாம் தோனி செய்த காரியம்.. ரசிகர்கள் கருத்து

“முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும், எங்களுக்கு எதிராக செமி பைனலில் விளையாட இருப்பது ஆஸ்திரேலியா எனும் மிகப்பெரிய அணி. கடந்த மூன்று ஆட்டங்களை எப்படி சிந்தித்துக் கொண்டு இருந்தோமோ, அதே போல நாளை ஆட்டம் குறித்தும் நாங்கள் சிந்திக்க வேண்டும். அதே பாணியில் நாங்கள் போட்டியை அணுக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -