பாகிஸ்தானில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 ஓவர் போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்
2017ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 50 ஓவர் கிரிக்கெட் தொடரை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகவே குறைந்துவிட்டது. டி20 தொடரின் வரவால் இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டு அது மிகப்பெரிய வெற்றியை மக்களிடையே பெற்றது.
அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் டி20 தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்திய அணையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக நடைபெற்ற போட்டிகள் சலிப்பை ஏற்படுத்தியதாகவும், 50 ஓவர் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது சலிப்பை ஏற்படுத்துகிறது
இதுகுறித்து அஸ்வின் கூறும் போது “இந்த ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து போட்டிக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு எதிர்காலம் இருக்கிறதா? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் மிகவும் சலிப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் 2027ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
இதையும் படிங்க:ODIல எங்க தோனி டீம் ஆதிக்கத்த முடிக்க.. ஐசிசி போட்ட பிளான்தான் அந்த ரூல் – அஸ்வின் பேட்டி
இந்த தொடர் ஒரு முடிவு எடுக்கப்படும் விளிம்பில் இருக்கிறது. ஏனென்றால் ஆட்டம் மிக மெதுவாக செல்கிறது. போட்டியில் சுவாரசியம் என்பது சற்று குறைந்து வருகிறது. மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு எதிர்காலம் இருக்கிறதா? என்பது குறித்து என் மனதில் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார். டி20 கிரிக்கெட் தொடருக்கு என்னதான் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தாலும் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருப்பது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியாக வருகிற இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது






