இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் நாளை துபாயில் நடைபெற உள்ளது.
இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இந்திய அணியை விட பாகிஸ்தானுக்கு நன்மை அதிகமாக இருப்பதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி
ஐசிசி நிகழ்வுகளில் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். இருநாட்டு தொடர் விளையாடாத நிலையில் இது போன்ற ஐசிசி தொடரில் மட்டுமே இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்கிறது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை காட்டிலும் வலு குறைவாக இருந்தாலும் முக்கியமான நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.
பாபர் அசாம், முகமது ரஸ்வான், சாஹின் அப்ரிடி, நசீம் சா போன்ற மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் இருக்கின்றனர். மேலும் இந்திய அணியை விட துபாயில் பாகிஸ்தான் அணி அதிகமான போட்டிகளில் விளையாடி இருப்பதால், இந்திய அணியை விட பாகிஸ்தான் அணிக்கே அதிக நன்மை இருப்பதாக இந்திய முன்னாள் ஜாமான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஒருவர் நினைத்தால் போதும்
இது குறித்து யுவராஜ் சிங் கூறும்போது “துபாயில் ஒரு தளம் பாகிஸ்தான் அணிக்கு இருப்பதால் அது அந்த அணிக்கு நன்மை பயக்கும் வகையில் இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் அங்கு அதிகமான கிரிக்கெட் போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நிலைமைகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். நீங்கள் இந்திய அணியில் மேட்ச் வின்னர்கள் குறித்து பேசுகிறீர்கள். ஆம் எங்களிடம் அதிகமான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்ற சாகின் அப்ரிடியின் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.
இதையும் படிங்க:81 ரன் 43 பந்து எல்லீஸ் பெர்ரி அதிரடி வீண்.. எம்ஐ கேப்டன் பொறுப்பான ஆட்டம்.. 4 விக்கெட்டில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது
ஆனால் பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் குறைவாக இருந்தாலும் ஒரு வீரர் நினைத்தால் கூட போட்டியை கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா, பாகிஸ்தான் அணி மோதல் என்பது வெற்றியாளர்களைப் பற்றியது மட்டுமல்ல. அது அந்த நேரத்தில் விளையாடுவது சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொள்வது. எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் இருப்பது பற்றியதாகும். இறுதி நாளில் இதனை சிறப்பாக செய்யக்கூடிய அணி வெற்றி பெறுகிறது” என்று யுவராஜ் சிங் பேசியிருக்கிறார். நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தற்போது பலமாக இருப்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.






