முதல் மேட்ச் போச்சு.. இனி இந்திய அணியை ஜெயிக்க நான் சொல்ற இத மட்டும் பண்ணுங்க – பாக் சோயப் அக்தர் அறிவுரை

0
3581

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 320 ரன்களை குவித்தது. இந்த இலக்கை சேஸ் செய்ய முடியாத பாகிஸ்தான் அணி வெறும் 260 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது குறித்து சிந்திக்கவே முடியும். இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சோயப் அக்தர் ஐடியா

பலம் வாய்ந்த இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் ஐசிசி தொடர்களில் இந்திய அணியிடம் அதிகளவில் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்திருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் ஜாம்பவான் சோயப் அக்தர் இந்திய அணியை வீழ்த்துவதற்கு சில ஐடியா கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சோயப் அக்தர், “தற்போது 2க்கு 2 என்று வெல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இந்திய அணி பார்க்கவே வலிமையாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு ,கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை என்று கருதுகிறேன். ஆக்ரோஷமாக விளையாடுவதை விடுத்து பாகிஸ்தான் அணிக்கு வேறு வழியே கிடையாது. அதற்காக முதல் போட்டியை போல் விளையாட கூடாது.

- Advertisement -

நிச்சயம் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியும். அதேபோல் பாகிஸ்தான் அணி கொஞ்சம் வித்தியாசமான கிரிக்கெட்டை ஆடுகிறது. பாகிஸ்தான் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எந்த கிரிக்கெட் வீரரும் இல்லை. ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவான வீரர்களே இருக்கிறார்கள்.”

4 பவுலர்கள்

“அவர்களால் ஒரு பந்துக்கு ஒரு ரன் கூட அடிக்க முடியவில்லை. ஒருவேளை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒவ்வொரு பந்துக்கு ஒரு ரன் எடுத்திருந்தால் கூட எளிதாக வென்றிருக்கலாம். இதன் மூலமாக பாகிஸ்தான் நிதானமாக ஆடுவதை புரிந்து கொள்ள முடியும். 2வது, பாகிஸ்தான் அணி அதிக ரன்களை எளிதாக விட்டுக் கொடுக்கிறது.

இதையும் படிங்க: CT 2025: நியூஸி மேட்ச் தோல்வி.. பாகிஸ்தான் அணி செமி பைனல் போக என்ன செய்ய வேண்டும்.?. முழு விவரம்

வெறும் 4 பவுலர்களுடன் மட்டும் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இதனால் ரன்களை செல்வதையும் அந்த அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இரு தவறுகளையும் திருத்தினால், பாகிஸ்தான் அணியால் அடுத்த 2 போட்டிகளில் எளிதாக வெற்றி பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -