3-0 தோற்றாலும் கவலை இல்லை.. இந்திய அணியை அந்த இடத்தில் வீழ்த்தணும்.. அதுதான் எங்கள் இலக்கு – இங்கி வீரர் பேட்டி

0
1559

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியிலாவது இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஆறுதல் அடையும் நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் அந்த இடத்தில் இந்திய அணிக்கு சரியான பதிலடி கொடுப்போம் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தொடரை வென்ற இந்திய அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிற நிலையில் டி20 தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரையும் கைப்பற்றியுள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என இங்கிலாந்து அணியை விட இந்திய அணி எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டக்கட் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வது எங்கள் இலக்காகும், எனவே இறுதிப் போட்டியில் இந்திய அணியை நாங்கள் வீழ்த்துவோம் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் இங்கே ஒரு விஷயத்தைகாகத்தான் வந்துள்ளோம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும். நாங்கள் இன்னமும் அதைச் செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். எங்கள் அணியில் உள்ள சில வீரர்கள் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு மிகப்பெரிய தொடராக இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி என்பது ஒரு மிகப்பெரிய போட்டித் தொடர்.

இதையும் படிங்க:இந்தியா ஆஸி இல்ல.. அந்த அணி அரை இறுதிக்கு வந்தா.. 2 மடங்கு ஆபத்தா மாறும் – ரவி சாஸ்திரி பேட்டி

இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் வரை எனக்கு கவலை இல்லை. நாங்கள் சென்று அந்தத் தொடரில் நன்றாக வேலை செய்தால் இந்த தொடர் குறித்து யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். எனவே சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவது எங்கள் முக்கிய இலக்காகும். அதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி இருந்தால் டக்கட் இது போன்ற கருத்துக்களை கூற மாட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -