நான் ரோகித் கோலி கிட்ட.. எதிர்பார்க்கிற விஷயம் இது மட்டும்தான்.. இதை செஞ்சா போதும் – கோச் கம்பீர் பேட்டி

0
538

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் முடிந்ததும் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் இருவரும் சமீபத்தில் தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கி வரும் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மூலமாக மீண்டும் சிறப்பாக விளையாடி ஐசிசி கோப்பையை இந்திய அணிக்காக வென்று தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இதுவே கடைசி ஐசிசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இருப்பினும் விராட் கோலி அவரது உடல் தகுதியை பொருத்தவரை அடுத்த உலக கோப்பை வரைக்கும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தெரிவித்திருக்கும் நிலையில் நாட்டிற்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற பசி அவர்களிடத்தில் இருக்க வேண்டும் என்று சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

விராட் ரோஹித் மீது எதிர்பார்ப்பு

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு பெரிய பங்கை வகிக்க வேண்டும். அவர்கள் இருவரும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது மாறுபட்ட சவால் ஆகும். இதில் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் நாக் அவுட் சுற்று போன்று இருக்கும். இந்தப் போட்டியில் எங்கும் நழுவ முடியாது. 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் எங்களால் சிறப்பாக தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதையும் படிங்க:சச்சின் செஞ்ச மாதிரி.. பாபர் அசாம் தனது அணிக்காக இதை நிச்சயம் செய்வார் – பாக் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய அணிக்குப் பெரிய மதிப்பை சேர்க்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்களைப் போலவே மற்ற வீரர்களும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்கிற பசியோடு இருக்க வேண்டும். 23ஆம் தேதி தான் போட்டி என்று நாங்கள் நினைக்கவில்லை. இதில் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போது உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால் என்னை பொருத்தவரை அது பந்துக்கும் மட்டைக்கும் இடையேயான போட்டியாக மட்டுமே நான் பார்க்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -