ஆஸியில் ஆகாஷ் தீப்பின் அருமையான பவுலிங்கை.. விராட் கோலி கெடுத்தார் – அஸ்வின் வெளியிட்ட தகவல்

0
24
Ashwin

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் பந்துவீச்சு ரிதம் விராட் கோலியால் பாதிக்கப்பட்டது என அதிரடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி முடிவடைந்ததும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தொடரின் பாதியில் அவர் இந்திய அணியை விட்டு வெளியேறி இந்தியாவுக்கும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்

பொதுவாகவே கிரிக்கெட் உலகத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த போக்கு இந்திய கிரிக்கெட்டில் மிக மிக அதிகமாக காணப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவு இந்திய கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்படுவது கிடையாது. இரண்டு போட்டி சரியாக வராவிட்டால் கூட உடனடியாக டிராப் செய்து விடுவார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது சிறப்பான பவுலிங் ரிதத்தில் பந்து வீசிக்கொண்டிருந்த ஆகாஷ் தீப் பந்துவீச்சை விராட் கோலியின் யோசனை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

பாதிக்கப்பட்ட ஆகாஷ் தீப் பவுலிங்

இதுகுறித்து அஸ்வின் பேசும்பொழுது “காபா டெஸ்டில் ஒரு அற்புதமான ஸ்பெல்லை ஆகாஷ் தீப் வீசினார். அவரிடமிருந்து மூன்று நான்கு ஓவர்கள் மிகவும் அற்புதமாக விழுந்து கொண்டிருந்தது. இப்படியான நேரத்தில் நான் வெளியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது விராட் கோலி அவரிடம் நேராக ஓடி செல்வதை நான் பார்த்தேன். அவர் பந்தை நேராக வீசும் படி கூறினார். உடனே லெக் கல்லி இடத்துக்கு ஒரு ஃபீல்டர் வந்தார். ஆகாஷ் தீப் பேட்ஸ்மேன் உடலை நோக்கி வீச ஆரம்பித்தார்”

இதையும் படிங்க : பறந்த ஸ்டெம்ப்.. ரஞ்சி டிராபியிலும் விராட் கோலி ஏமாற்றம்.. வெளியேறிய ஆயிரக்கணக்கான ரசிகர்கள்

“விராட் கோலி இப்படி கொடுத்த ஒரு யோசனையின் காரணமாக ஆகாஷ் தீப்பின் சிறந்த ஸ்பெல் உடனடியாக பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்து உடம்புக்குள் வந்ததால் ஸ்மித் பிளிக் மற்றும் ஃபுல் ஷாட்டுகளை விளையாட ஆரம்பித்தார். வீரர்கள் பந்துவீச்சாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி விராட் கோலி புரிந்து கொள்ளாத காரணத்தினால் ஆகாஷ் தீப் பவுலிங் ரிதம் பாதிக்கப்பட்டது. அவரை அப்படியே தொடர்ந்து பந்து வீச அனுமதித்திருக்க வேண்டும். இறுதியாக அவரை நீக்கும்படி ஆனது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -