இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நாளை புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு மாற்றி அமைக்கப்படலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
கம்பீர்-சூர்யா முடிவை மாற்றிக் கொள்வார்களா?
இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தங்களது பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறிவிட்டார். அந்த இடத்தில் வரக்கூடியவர் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் மேலும் இரண்டு ஓவர்கள் ஆவது பந்து வீசவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த வகையில் எடுத்துக் கொள்ளும் பொழுது இந்த இடத்தில் விளையாடுவதற்கு ஆல்ரவுண்டர்களாக சிவம் துபே, ரமன்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என மூவர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில் இரண்டு போட்டிகளாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரை முன்கூட்டியே பேட்டிங் அனுப்பும்போது அவரால் சரியாக விளையாட முடியவில்லை. எனவே இந்த முடிவை மாற்றி சிவம் துபே ரமன்தீப் சிங் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு தருவார்களா? என்று பார்க்க வேண்டும். மேலும் காயம் சரியானால் ரிங்கு சிங் இடம் பெற வேண்டும்.
இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் திட்டம்
இந்த தொடரில் இந்திய அணியில் முதல் 2 போட்டிகளில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக அர்ஸ்தீப் சிங் விளையாடி வந்தார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் முகமது ஷமி இடம் பெற்றாலும் கூட, அர்ஸ்தீப் சிங்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அது நடந்தது.
அதிக சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதால் பெரிய ஷாட்டுகளை இங்கிலாந்து வீரர்கள் அடிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக அவர்களை எளிதாக ஆட்டம் இழக்க வைத்தாலும், பெரிய ஷாட் மூலம் தேவையான ரன்னுக்கு சென்று விடுகிறார்கள். எனவே ரவி பிஸ்னாயை நீக்கிவிட்டு அர்ஸ்தீப் சிங்கை விளையாட வைக்க வேண்டியது முக்கியமாக இருக்கிறது.
இதையும் படிங்க : என்னால நம்பவே முடியல..கோலி பலவீனத்தை புவி ரஞ்சிலயே யூஸ் பண்ணி இருக்காரு – முகமது கைப் பேட்டி
இந்திய பிளேயிங் லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஸ்தீப் சிங்.






