சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் இதில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி அதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்திய அணியை பொறுத்த வரை தொடக்க வீரர்களாக இதுவரை கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு விளையாட இடம் பிடித்திருக்கிறார். மேலும் அவரும் ஒரு தொடக்க வீரர் என்பதால் கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதற்கு சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா தொடக்க வீரராக பல காலம் ஒருநாள் அணியில் இடம் பிடித்து விளையாடி வருவதால் அவரை மாற்றுவது கடினம். எனவே ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களம் இறக்கிவிட்டு அவருக்கு அடுத்ததாக கில் மூன்றாவது இடத்தில் களமிறங்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். மேலும் மூன்றாவது வரிசையில் காலம் காலமாக விளையாடி வரும் விராட் கோலி நான்காவது வரிசைக்கு சென்றால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பலமாகும் என்று அவர் நம்புகிறார்.
சச்சின் செய்யும்போது கோலியும் விளையாடலாம்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “யஷஸ்வி ஜெய் ஸ்வால் தொடக்க வரிசையில் ரோகித் சர்மாவோடு களம் இறங்கினால் மூன்றாவது வரிசையில் சுப்மான் கில் களமிறங்கலாம். இதில் விராட் கோலி நான்காவது வரிசையில் களமிறங்கி விளையாடலாம். சச்சின் டெண்டுல்கர் கூட அதே நான்காவது வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருக்கிறார். கில் ஒரு திறமையான வீரர். எனவே டெஸ்ட் ஃபார்மட்டை வைத்து அவரது திறமையை மதிப்பிடாதீர்கள்.
இதையும் படிங்க:இந்தியா முதல் டி20.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. ஆர்ச்சர் சிஎஸ்கே வீரர் வருகை.. அசத்தல் அணி
நீங்கள் விரும்பும் பார்மெட்டுக்கு தகுந்தவாறு அவரை மதிப்பிடலாம். ஆனால் கில் இந்த ஒருநாள் அணியில் நிச்சயமாக இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். அதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை” என்று அஸ்வின் கூறுகிறார். விராட் கோலி இதுவரை நான்காவது வரிசையில் களம் இறங்கி 39 இன்னிங்ஸ்களில் 55.22 சராசரியுடன்
1767 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






