கருண் நாயர் மட்டுமல்ல.. இந்த 2 அதிரடி வீரர்கள செலக்ட் பண்ணாதது வருத்தம்தான் – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
61
Raina

தற்போது சாம்பியன் டிராபி தொடருக்கு இந்திய அணியில் கருண் நாயரை தேர்வு செய்யாதது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு அதிரடி இந்திய வீரர்களை தேர்வு செய்யாததும் வருத்தமான விஷயமாக அமைந்திருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் கருண் நாயர் மொத்தம் எட்டு போட்டிகளில் ஐந்து சதங்கள் உட்பட 779 ரன்கள் குவித்திருந்தார். ஆனால் அவருக்கு திடீரென சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

- Advertisement -

அவரது அர்ப்பணிப்புக்கு சல்யூட்

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கருண் நாயரை தேர்வு செய்யாதது மற்றும் இல்லாமல், மேலும் இரண்டு இந்திய அதிரடி ஆட்டக்காரர்கள் தேர்வு செய்யப்படாதது துரதிஷ்டவசமாக அமைந்திருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும் பொழுது ” கருண் நாயரின் அர்ப்பணிப்புக்கு என்னுடைய சல்யூட். அவர் பெரிய சராசரியில் 700 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கிறார். தேர்வுக்கு அவரது பெயர் நிச்சயம் பேசப்பட்டு இருக்கும். அவருக்கு இன்னும் நிறைய போட்டிகள் காத்திருக்கிறது. அவரை தேர்வு செய்ய முடியாமல் போனது துரதிஷ்டவசமானது என்று நினைக்கிறேன். அவர் முதல் தர கிரிக்கெட்டில் எவ்வளவு விளையாட விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது”

- Advertisement -

இவர்கள் இருவருமே முக்கியமானவர்கள்

“நீங்கள் தற்போது தேர்வு செய்திருக்கும் அணியை எடுத்துக் கொண்டால் சூரியகுமார் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி போன்ற வீரர்கள் கூட இல்லை என்பதை பார்க்கலாம். நிதீஷ் குமார் ரெட்டியை பற்றி தற்போது யாரும் பேசவில்லை. ஆஸ்திரேலியாவில் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் முக்கியமானவராக இருந்திருப்பார்”

இதையும் படிங்க : 4.2 ஓவர்.. முதல் போட்டியே இந்திய அணி இமாலய வெற்றி.. வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாபம்.. U19 மகளிர் டி20 உலக கோப்பை 2025

“புகழ்பெற்ற பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாத பொழுது, அவர்கள் மீண்டும் தங்களுடைய சிறப்பான ஃபார்முக்கு திரும்பி வந்து தங்களுடைய நற்பெயரை நிலைநாட்ட விரும்புவார்கள். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த பார்மில் இல்லை. ஆனால் அவர்கள் இருவருமே புலிகள். தொடக்க வீரராக ரோகித் சர்மா, மூன்றாவது இடத்தில் விராட் கோலி தங்களுடைய அணியை வெற்றி பெற வைக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -