இந்திய வீரர்களிடம்.. பிசிசிஐ முதல்ல இதை தடை செய்யுங்க.. உங்கள நம்ப முடியல – ஹர்ஷா போக்லே கருத்து

0
149
Harsha

இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முக்கியமான தடையை விதிக்க வேண்டும் என இந்திய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணி தன்னுடைய கடைசி எட்டு டெஸ்ட் போட்டியில் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டும் வென்று ஆறு டெஸ்ட் போட்டிகளை தோற்று இருக்கிறது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை கையில் இருந்தும் இழந்தது. இதனால் நிறைய விமர்சனங்கள் இந்திய கிரிக்கெட் அணியை சுற்றி இழந்திருக்கிறது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்குள் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வர ஆலோசித்து வருகிறது.

- Advertisement -

ஆலோசிக்கப்பட்டு வரும் மாற்றங்கள்

இந்திய கிரிக்கெட்டில் முன்பு இந்திய வீரர்கள் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது அவர்களுடைய குடும்பத்தினர் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பின்பு இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஒரு சுற்றுப்பயணத்தில் முழுமையாக வீரர்களின் குடும்பம் அவர்களுடன் தங்கலாம் என விதி மாற்றப்பட்டது.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் 45 நாட்கள் கொண்ட பெரிய சுற்றுப்பயணத்தில் இரண்டு வாரங்கள் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்கலாம் எனவும், உள்நாட்டு சுற்றுப்பயணம் என்றால் 7 நாட்கள் மட்டுமே தங்கலாம் எனவும் விதியை மாற்ற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் ஹர்ஷா போக்லே வேறொரு முக்கியமான விஷயத்திலும் மாற்றம் கொண்டு வர கேட்டிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முதலில் தடை விதியுங்கள்

இந்திய கிரிக்கெட்டில் இருந்து உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராக ஹர்ஷா போக்லே இருந்து வருகிறார். கிரிக்கெட் போட்டிகள் தாண்டி வெளியில் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் இவர் வெளியிடும் கருத்துக்கு பெரிய முக்கியத்துவம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கம்பீருக்கு பிடிக்காத விஷயம்.. மீண்டும் வருகிறது விராட் கோலி காலத்து சூப்பர் மேட்டர் – வெளியான செய்தி

தற்போது முக்கியமான விஷயம் பற்றி பேசி இருக்கும் ஹர்ஷா போக்லே கூறும்பொழுது “பிசிசிஐ இந்திய அணியில் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்களைப் பற்றி படிக்கும் பொழுது, இதை எந்த அளவுக்கு நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு மாற்றம் என்றால், வீரர்கள் தனிப்பட்ட முறையில் விளம்பர ஏஜென்சிகளை வைத்துக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் கூறுவேன். நீங்கள் முதலில் இதற்கு தடை விதியுங்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -