21ஆம் நூற்றாண்டு.. ஆசிய டெஸ்ட் பிளேயிங் XI.. 5 இந்திய வீரர்களுக்கு இடம்.. அனில் கும்ப்ளே இல்லை

0
347
Sachin

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் 21-ஆம் நூற்றாண்டு ஆசிய டெஸ்ட் பிளேயிங் லெவனில் மொத்தம் ஐந்து இந்திய வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் ஐந்து இந்திய வீரர்கள், மூன்று பாகிஸ்தான் வீரர்கள், மூன்று இலங்கை வீரர்கள் என மொத்தம் 11 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த அணியில் அனில் கும்ப்ளேவுக்கு இடம் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்திய தொடக்க ஜோடி

இந்த பிளேயிங் லெவனில் தொடக்க ஜோடியாக முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடும் இந்திய வீரர் வீரேந்திர சேவாக், இதற்கு அப்படியே மாற்றாக தடுத்து விளையாடி பந்துவீச்சாளர்களை சோர்வடைய வைக்கும் இந்திய வீரர் ராகுல் டிராவிட் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

மேலும் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் மிடில் ஆர்டர் யூனுஸ் கான் மற்றும் இந்தியாவின் மிடில் ஆர்டர் சச்சின் டெண்டுல்கர் நான்காவது இடத்தில் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இலங்கையின் குமார் சங்கக்கரா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

அனில் கும்ப்ளேவுக்கு இடமில்லை

இதற்கடுத்து பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய அணியில் தற்போது ஓய்வு பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கையின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் மற்றும் இந்தியாவின் பும்ரா, பாகிஸ்தானின் சோயப் அக்தர், மேலும் இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பிளேயிங் லெவலில் முத்தையா முரளிதரன் இருக்கும் பொழுது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினை விட அதிக விக்கெட் கைப்பற்றி இருக்கும் அனில் கும்ப்ளேவுக்கு இடம் தராதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க : என்னை அவர்கள் தூக்கி எறியலாம்.. ஆனா இத மட்டும் தடுக்கவே முடியாது – பிரித்வி ஷா விமர்சனம்

ஆசிய டெஸ்ட் பிளேயிங் XI: வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், யூனிஸ்கான், சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா, இன்சமாம் உல் ஹக், ரவிச்சந்திரன் அஸ்வின், ரங்கனா ஹெராத், சோயப் அக்தர் பும்ரா மற்றும் முரளிதரன்.

- Advertisement -