இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பயிற்சியாளர் குழு பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை மேம்படுத்த என்ன மாதிரி வேலைகளை செய்து இருக்கிறது? என்பது குறித்து சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்திய அணி சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மொத்தமாக நியூசிலாந்து அணியிடம் இழந்தது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவர்களது மண்ணில் ஒன்றுக்கு மூன்று என இழந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய பயிற்சியாளர்கள் குழு சாதித்தது என்ன? என்று சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
பயிற்சியாளர் குழு இதற்கு பதில் சொல்ல வேண்டும்
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” இந்திய பயிற்சியாளர் குழு என்ன செய்து கொண்டு இருந்தது? குறிப்பாக இந்திய பேட்டிங் பயிற்சியாளர். நியூசிலாந்து அணிக்கு எதிராக 46 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட் ஆகியது. அதற்குப் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் அணுகு முறையில் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்? நியூசிலாந்து தொடரிலும் பேட்டிங் வரிசையில் எந்த பாத்திரங்களும் இல்லை. அதுவேதான் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் நடந்திருக்கிறது”
” நாம் அவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். சகோதரர்களை நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? என்ன மாதிரியான விஷயங்கள் மாறி இருக்கிறது? என்று கேட்க வேண்டும். சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட எதிர் கொள்ள முடியாத அளவுக்கு சிறந்த பந்துவீச்சை நமது பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டார்களா? அப்படி ஏதும் இவர்கள் சொல்லப் போகிறார்களா? என்று பார்க்க வேண்டும்”
இந்த பயிற்சியாளர் குழு தொடர வேண்டுமா?
“இந்த வீரர் விளையாட வேண்டுமா? இந்த வீரர் எதிர்காலத்திற்கு சரியாக வருவாரா? இன்று நாம் தொடர்ந்து வீரர்களை பார்த்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதே போல இந்த பயிற்சியாளர் குழுவை பார்த்து, இவர்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக தொடர வேண்டுமா? என்றும் நாம் கேட்க வேண்டும்”
இதையும் படிங்க : நண்பா விராட் இத மட்டும் செய்யுங்க.. உங்க பிரச்சனை ஈஸியா தீர்ந்திடும் – ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை
“நான் அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபி பற்றி பேசவில்லை. ஆறு மாதங்கள் கழித்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசுகிறேன். நான் இவர்களை பார்த்து என்ன கேட்கிறேன் என்றால், நீங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? அவர்களை மேம்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்க நினைக்கிறேன்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






