நண்பா விராட் இத மட்டும் செய்யுங்க.. உங்க பிரச்சனை ஈஸியா தீர்ந்திடும் – ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை

0
753
Virat

இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் பேட்டிங் பிரச்சனைக்கு அவருடைய நண்பரான முன்னாள் தென்னாபிரிக்க வீரர் ஏபி.டிவில்லியர்ஸ் தீர்வு கூறி இருக்கிறார்.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆப் ஸ்டெம்பில் வெளியில் செல்லும் பந்துக்கு விராட் கோலி தொடர்ந்து ஆட்டமிழந்து இந்திய அணி நிர்வாகத்தையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் மிகவும் ஏமாற்றினார். தற்போது அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையும் ஒரு கேள்விக்குறியில் இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி என்ன செய்ய வேண்டும்?

தற்போது எளிய பிரச்சனையாக இருந்த போதும் விராட் கோலியால் அதிலிருந்து மீள முடியாதது கவலை அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலியின் நண்பரான ஏபி.டிவில்லியர்ஸ் அவருடைய பேட்டிங் பலவீனத்தை சரி செய்வது எப்படி? என்பது குறித்து தன்னுடைய அனுபவத்தில் இருந்து அறிவுரை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது ” உலகில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கிறது. எனக்கு நேராக வரும் பந்து பேடில் அடித்தது. இது என்னுடைய பலவீனமாக இருந்தது. பிறகு என் தொழில் வாழ்க்கையின் பின் முனையில் நான் அதை சரி செய்து எல்லா சூழ்நிலைக்கு ரன்கள் எடுக்கும்படி பிரச்சனைக்கு தீர்வை கண்டறிந்து கொண்டேன்”

- Advertisement -

விராட் கோலி சண்டை மனப்பான்மையை கைவிட வேண்டும்

“விராட் கோலி எடுத்ததும் ஒரு போரில் ஈடுபட்டு விடுகிறார். கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடைய பலமாகவும் அதுவே இருந்திருக்கிறது தற்போது பலவீனமாகவும் அதுவே இருந்திருக்கிறது. விராட் கோலி எப்பொழுதும் சண்டையை விரும்புகிறார். உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் பார்மில் இல்லாத பொழுது அத்தகைய மனநிலையில் இருக்கக் கூடாது”

இதையும் படிங்க : ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு.. ஸ்டான்ட் அப் காமெடியனாக வரலாம்.. வரலாறு வேற – சைமன் கேடிச் விமர்சனம்

“ஒவ்வொரு பந்தையும் மீட்டமைத்து விளையாடி பழைய பந்தை மறந்து விட வேண்டும். ஆனால் விராட் கோலி இதை மறந்து விடுகிறார். சண்டை மனப்பான்மையும் அதில் ஈடுபட ஆர்வமாக இருப்பதும், ஒரு முழு இந்தியாவிற்கும் தன்னை காட்ட நினைப்பதும் பிரச்சனையாகிறது. வலைகளில் அதிக மணி நேரம் செலவு செய்து, மனரீதியாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு, பந்துக்கு பந்து கவனம் செலுத்துவதின் மூலம் இதிலிருந்து வெளியில் வந்து விடலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -