162 ரன்ஸ்.. காயத்திலும் பும்ரா செய்த நெகிழ்ச்சி செயல்.. கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா.. முடிந்த இந்திய அணியின் WTC பைனல் வாய்ப்பு

0
228

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இடம் இருந்து கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

பும்ரா செய்த நெகிழ்ச்சி செயல்

பும்ரா தலைமையிலான இந்திய அணி சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதன்படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கம்போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்படாத பேட்டிங்கால் தனது முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் மட்டுமே குவித்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அணியின் கேப்டன் பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக போட்டியில் இருந்து பாதியில் வெளியேற அவருக்கு பதிலாக விராட் கோலி கேப்டனாக தலைமை தாங்கினார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி திரும்பவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரிஷப் பண்ட் மட்டுமே அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பாக மூன்றாவது நாள் ஆட்டத்தில் காயம் அடைந்த நிலையிலும் பும்ரா பேட்டிங் செய்ய களம் இறங்கியது ரசிகர்களை நெகழ்ச்சிக்கு உள்ளாக்கியது

- Advertisement -

10 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை இழந்தது

இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு நான்கு விக்கெட்டுகள் இழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழக்க, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இந்திய அணிக்கு பும்ரா காயம் காரணமாக களம் இறங்காதது மிகப்பெரிய பிரச்சனையாக அமைந்தது. இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வீழ்த்திய நிலையில் அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த கவாஜா மற்றும் ஹெட் கூட்டணி 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதியாக ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் இழப்புக்கு 27 ஓவர்களில் 162 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:7 வருஷமா இந்திய டீம்ல இல்லாத இவருக்கு.. சாம்பியன்ஸ் டிராபியில் இடம் தரணும்.. இப்ப உலக சாதனை வேற படச்சிருக்காரு – உத்தப்பா கோரிக்கை

இதற்கு முன்னர் இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரடர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி 10 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியிடம் இந்த கோப்பையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பும்ரா மட்டுமே இந்தத் தொடரில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ஒரு சில பேட்ச்மேன்களை தவிர மற்ற அனைவரும் மோசமான ஃபார்மில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -