அடுத்து நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படலாம் என புதிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து துபாயில் வைத்து சாம்பியன்ஸ் டிராபியின் தங்களது போட்டிகளை விளையாடுகிறது.
ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள முடிவு
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது 99 சதவீதம் உறுதியாகி இருக்கிறது. இனிமேல் அவரை வெள்ளை உடையில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இனி ரோகித் சர்மாவுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையும் முடிந்துவிட்டது என்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அவரது பார்ம் மோசமாக இருக்கின்ற காரணத்தினால், அவருடைய இடத்தில் ஜெய்ஸ்வாலை விளையாட வைத்து அவரை ஒருநாள் அணியில் இருந்தும் நீக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா வந்து மொத்தமாக ஓய்வை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான புதிய செய்திகள்
இது குறித்து பிசிசிஐ தரப்பில் பெயர் வெளியிடாத நபரின் தகவலில் கூறும் பொழுது “ஹர்திக் உயர் அழுத்த சூழ்நிலைகளில் சிறப்பாக இருக்கக்கூடியவராக இருப்பார். அவர் ஒரு ஆல் ரவுண்டராக இருப்பதாலும் அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதாலும் சாம்பியன்ஸ் டிராபிக் கேப்டனாக இருக்க வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே கேப்டன் பொறுப்புக்கு தேர்வு செய்வதற்கு காரணம் உருவாகிறது”
இதையும் படிங்க : ரோகித் விஷயத்தில் பும்ரா பொய் சொல்ல வேண்டாம்.. உண்மையில் நடந்தது இதுதான் – மார்க் டெய்லர் விமர்சனம்
“அதே சமயத்தில் கில்லுக்கு இன்னும் பெரிய அளவில் கேப்டனாக அனுபவம் ஏதும் இல்லை. அவர் இன்னும் கேப்டன் பொறுப்பில் முதிர்ச்சி அடைவதற்கு காலம் தேவைப்படுகிறது. அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் சீராக இல்லை. எனவே ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டு வரப்படுவது சிறந்த தேர்வாக அமைகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.






