வாசிம் அக்ரம் மெக்ராத் லெஜண்ட்ஸ்தான்.. ஆனா 2013-14ல அவருக்கு அடுத்து .. நான் பார்த்ததுலயே பெஸ்ட் பும்ராதான் – ஆஸி டேரன் லீமன்

0
468

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இருப்பினும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்தத் தொடரில் ஏற்படுத்தி வரும் அபாரமான தாக்கம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமன் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய அணி ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலியா வந்தடைந்தது. முதல் போட்டியில் பும்ரா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் இருந்த ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தலைமை தாங்கிய பின்னர் இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் டிரா என சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ளது.

அடுத்ததாக நடைபெற உள்ள சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யவாது முடியும் என்ற நிலை இருக்கும் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனி ஒருவராக இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை இந்த தொடரில் 30 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள சிட்னி டெஸ்ட் போட்டியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேரன் லீமன் பும்ரா அடுத்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகள் இருப்பதாகவும் இப்படி ஒரு சிறந்த பந்துவீச்சாளரை தான் பார்த்ததில்லை என்று சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

நேரலையில் பார்த்த மிகச் சிறந்த வீரர்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியே வரும்போது பும்ரா அடுத்த கேப்டனாக மாறுவார் என்று நினைக்கிறேன். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக மிக அபாரமாக செயல்பட்டார். நான் நேரலையில் பார்த்த சிறந்த பந்துவீச்சாளர் அவர். நான் வாசிம் அக்ரம், கிலென் மெக்ராத் போன்ற அனைவரையும் பார்த்திருக்கிறேன். ஆனால் தனி ஒரு மனிதனாக ஒரு தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக 2013-14ம் ஆண்டில் ஆஷஸ் தொடரில் மிட்சல் ஜான்சனுக்கு பிறகு பும்ராவை தான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க:நீங்க ஒழுங்கா கிரிக்கெட் ஆடினால்.. உங்களுக்கு எந்த விளம்பரமும் தேவையே கிடையாது – தோனி பேட்டி

பும்ரா ஏற்கனவே இந்த தொடரில் 30 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த நிலையில் இருக்கிறார். பார்ப்பதற்கு மிகச் சிறந்த வீரராக திகழும் நிலையில் அடுத்த கேப்டனாக வருவதற்கு அனைத்து தகுதிகளும் அவரிடத்தில் இருக்கிறது. எனவே அவர் கேப்டன் பொறுப்பை பெறும் போது மிகச் சிறப்பாக செயல்படுவார்” என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டுஅணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -