இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளரான நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை முந்தி சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 339 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக கருதப்படுகிற நாதன் லயன் நித்திஷ் ரெட்டியின் விக்கட்டை வீழ்த்தி முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதற்குப் பிறகு கடைசி விக்கட்டாக முகமது சிராஜுன் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து 184 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நாதன் லயன் ஏற்கனவே முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 538 விக்கெட்டுகள் வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
அஸ்வினை முந்திய நாதன் லயன்
இந்திய அணியின் முன்னணி சுழற் பந்து ஜாம்பவானாக கருதப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 537 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இளைஞர்களுக்கு வழி விடும் விதமாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வினை அறிவித்தார்.
இதையும் படிங்க:246 ரன்.. 21 போர்.. சாதனை படைத்த ஆப்கன் கேப்டன்.. ஜிம்பாப்வே முதல் டெஸ்டில் அபாரம்.. முழு விபரம்
இந்த நிலையில் நாதன் லயன் இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 538 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் டாப் பட்டியலில் ஏழாவது இடத்தில் தற்போது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போது எட்டாவது இடத்தில் இருக்கிறார். இதில் முதலிடத்தில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






