186 ரன்.. மீண்டும் கடைசியில் கோட்டை விட்ட இலங்கை அணி.. நியூஸி அபார வெற்றி.. தொடரை வென்றது

0
366
NZ

நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் மூன்று போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

இலங்கை அணி இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு தற்பொழுது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்பில் இருந்து தோற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இளம் வீரர் கடைசி நேர அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரச்சின் ரவீந்திரா ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் டிம் ராபின்சன் 34 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து மிடில் வரிசையில் சாப்மேன் 29 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் வந்த இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மிட்சல் ஹே அதிரடியாக 19 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சித்தர்கள் உடன் 41 ரன்கள் விளாசினார். போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை கடைசியில் இவரிடம் கோட்டை விட்டது. இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. இலங்கைத் தரப்பில் ஹசரங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய டஃபி

இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா 28 பந்தில் 37 ரன் மற்றும் குசால் மெண்டிஸ் 35 பந்தில் 48 ரன்கள் எடுத்து மீண்டும் நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த குசால் பெரேரா 35 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : ஆஸி வெற்றி.. WTC புள்ளி பட்டியல் மாற்றம்.. இந்திய அணி பைனல் செல்ல என்ன வாய்ப்பு? – முழு தகவல்கள்

முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் கொடுத்த மிகச்சிறந்த துவக்கத்தை மீண்டும் இலங்கை அணி முதல் போட்டி போலவே பயன்படுத்திக் கொள்ளவில்லை. இறுதியாக இலங்கை அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்து, 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து தரப்பில் முதல் போட்டியில் தோல்வியில் இருந்த ஆட்டத்தை வெற்றிக்கு மாற்றிய ஜேக்கப் டஃபி இந்த போட்டியிலும் நான்கு விக்கெட் கைப்பற்றினார். மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியை வென்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது

- Advertisement -