ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணித் தேர்வு தவறான முறையில் நடைபெற்று இருப்பதாக இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தேர்வு முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து மிகவும் வித்தியாசமான முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
கம்பீர் ரோஹித் எடுத்த முடிவு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக பிளேயிங் லெவனில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டிருக்கிறார். அவருடைய இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த வகையில் தற்பொழுது இந்திய அணிகள் மொத்தம் ஆறு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
மேலும் இந்திய அணிக்கு இந்த தொடரில் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த கே.எல்.ராகுல் மூன்றாவது இடத்தில் விளையாட வைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. முதல் இடத்திற்கு மீண்டும் கேப்டன் ரோஹித் சர்மா துவக்க வீரராக வருகிறார் என்றும் நம்பப்படுகிறது. தற்பொழுது இந்த இரண்டு பெரிய மாற்றங்களும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
நீங்கள் நான்காவது பந்துவீச்சாளர் இல்லை
இந்த நிலையில் நிதீஷ் குமார் ரெட்டி ஏற்கனவே அணியில் ஐந்தாவது பந்துவீச்சாளராக இருந்து வரும் நிலையில் அவருடைய இடத்திற்கு தான் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், வாஷிங்டன் சுந்தர் தற்பொழுது நான்காவது பந்துவீச்சாளர் இல்லை எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : 4483 பந்து.. 1095 நாள்.. தகர்க்கப்பட்ட பும்ராவின் சாதனை.. 19 வயது அறிமுகவீரர் அசத்தல்.. 4வது டெஸ்ட்
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “வாஷிங்டன் சுந்தரை அணியில் தேர்ந்தெடுத்தது குறித்து எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அவரால் நிறைய ஓவர்கள் பந்து வீச முடியும். ஆனால் வாஷிங்டன் சுந்தர் யாருடைய இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரச்சனை. அவர் கில் உடைய இடத்தில் வந்திருக்கக் கூடாது. அவர் நிதிஷ் குமார் ரெட்டி இடத்தில் வந்திருக்க வேண்டும். நீங்கள் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் வந்து பத்து ஓவர்கள் பந்து வீசுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்திய அணி நிர்வாகம் தேடும் நான்காவது பந்துவீச்சாளராக இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.






