கம்பீர் இந்த முடிவை எடுக்க வேணாம்.. என்னால பார்க்க முடியல.. மெல்போர்ன்ல இது வேண்டாம் – சுனில் கவாஸ்கர் பேட்டி

0
61

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் நான்காவது போட்டிக்கு விளையாடும் இந்திய வீரர்களின் தேர்வு குறித்து சற்று பிரச்சனை எழுந்துள்ளது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை சுந்தர் தேர்வு செய்யப்பட்டால் இந்திய அணி நிதீஷ் குமார் ரெட்டியோடு இரண்டு வேகம் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் செல்லலாம். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீபுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை திரும்பவும் விளையாட வைக்கும் முயற்சியில் கம்பீர் தலைமையிலான இந்திய நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணித்தேர்வு குறித்து கவாஸ்கர்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி நிதிஷ்குமார் ரெட்டியை கைவிட முடியாது. ஏனென்றால் இந்திய அணியின் நான்காவது பந்துவீச்சாளர் அவர்தான். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டியுடன் இந்திய அணி செல்வதை என்னால் பார்க்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணி தான்.

இதையும் படிங்க:விராட் பற்றி ரோகித் அப்படி பேசக்கூடாது.. பேட்டிங் பயிற்சியாளரை மாத்தணும் போல – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

அதுபோல ஆகாஷ் தீப் பதிலாக ஹர்சித் ராணாவை எதற்காக கொண்டு வர வேண்டும். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்த ஒரு வீரரை எதற்காக அடுத்த போட்டியில் கைவிட வேண்டும். எனவே என்னை பொறுத்தவரை விளையாடும் அணியில் எந்த விதமான மாற்றமும் இருக்கக் கூடாது. இதை அணியுடன் செல்ல வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டுமானால் அடுத்த டெஸ்ட் போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. எனவே இந்திய அணி வெற்றி பெறுமா என்ற பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -