விராட் பற்றி ரோகித் அப்படி பேசக்கூடாது.. பேட்டிங் பயிற்சியாளரை மாத்தணும் போல – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
187
Rohit

புதிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் இருக்கும் பிரச்சனை குறித்து ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்த விதம் குறைபாடு ஆனது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா “நீங்கள் விராட் கோலியை மாடர்ன் டே கிரிக்கெட் கிரேட் என்று கூறுகிறீர்கள். இப்படியான கிரேட் ஆன பேட்ஸ்மேனுக்கு தன்னுடைய பிரச்சனைக்கு தானே வழியை கண்டுபிடித்துக் கொள்ள தெரியும்” என்று கூறியிருந்தார். தற்போது இது குறித்துதான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் கொடுத்தது குறைபாடான அறிக்கை

இதுகுறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” விராட் கோலி பேட்டிங் பிரச்சினை பற்றி ரோகித் சர்மா கூறியது ஒரு குறைபாடு உள்ள அறிக்கை. அதே சமயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசி ஒரு பேட்ஸ்மேனுக்கு கேப்டனால் அழுத்தத்தை உண்டாக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது”

“ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் உள்ளுக்குள் கிரிக்கெட் வீரர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். நானும் இந்திய கிரிக்கெட் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இருந்தவன்தான். எனவே உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கும் தெரியும்”

- Advertisement -

பேட்டிங் பயிற்சியாளர்தான் பொறுப்பு

“நவீன கால பேட்டிங் ஜாம்பவான் தன்னுடைய பிரச்சனைக்கு தானே தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் விராட் கோலி விஷயத்தில் இன்னும் அது நடக்கவில்லை. விராட் கோலி இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை. அப்படி என்றால் இந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியவராக பேட்டிங் பயிற்சியாளர்தான் இருக்கிறார்”

இதையும் படிங்க : ஐசிசி ரேங்க்.. அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா.. உச்ச இடத்தில் ஆதிக்கம்.. வெளியான புதிய பட்டியல்

“எங்கள் வீரர்களுக்கு பேட்டிங்கில் இப்படியான பிரச்சினை மனரீதியாக இருக்கும் என்றால் அதை பயிற்சியாளர் தீர்த்து வைப்பது என்பது கடினமான விஷயம். ஆனால் இது தொழில்நுட்ப ரீதியான பிரச்சனை என்றால் அவர்தான் தீர்த்து வைக்க வேண்டும். ஒருவேளை அவரால் இது முடியவில்லை என்றால் அவரை மாற்றுவதற்கு குறித்து யோசிக்க வேண்டும். எனவே விராட் கோலிக்கு வெளியில் இருந்து தற்போது உதவிகள் தேவைப்படுகிறது. அவரால் தன் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -